Shaman Mithru: திரையுலகில் தொடரும் கொரோனா பலி - 'தொரட்டி' பட ஹீரோ ஷமன் மித்ரு மரணம்

ஷமன் மித்ரு

தொரட்டி படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ஷமன் மித்ரு தற்போது கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்.

  • Share this:
    தொரட்டி படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரோனா தொற்றால் இன்று காலை உயிரிழந்தார்.

    கொரோனா பெருந்தொற்று பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிக தொற்றுகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் நிறைய பிரபலங்களும் மறைந்திருக்கிறார்கள்.

    முதல் அலையின் போது எஸ்பிபி உயிரிழந்தார். இரண்டாவது அலையில் நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ், நடிகர் பாண்டு என கொரோனாவால் உயிரிழந்த திரைப்பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது. புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் சமீபத்தில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து நடிகர் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனா தொற்றால் காலமானார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தொரட்டி படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ஷமன் மித்ரு தற்போது கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார். 2019-ஆம் ஆண்டு வெளியான தொரட்டி திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஷமன் மித்ரு பாராட்டுகளையும் பெற்றார். கடந்த ஒரு மாத காலமாக கொரோனா காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷமன் மித்ரு இன்று காலை உயிரிழந்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: