• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மீண்டும் பிரசாந்தை இயக்கும் தியாகராஜன்?

மீண்டும் பிரசாந்தை இயக்கும் தியாகராஜன்?

பிரசாந்த் தியாகராஜன்

பிரசாந்த் தியாகராஜன்

பிரசாந்த் நடிக்கப் போகும் அடுத்தப் படத்தையும் தியாகராஜனே இயக்க இருக்கிறார். படத்திற்கு சல்யூட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

  • Share this:
    நடிகர் பிரசாந்தின் புதிய படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு சல்யூட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதற்காகவே வளர்க்கப்பட்டவர் பிரசாந்த். குதிரையேற்றம், கராத்தே, நடனம் என்று அனைத்திலும் முறையான பயிற்சி எடுத்து வைகாசி பொறந்தாச்சு படத்தில் 1990 இல் அறிமுகமானார். இரண்டாவது படம் எம்.டி.வாசுதேவன் நாயரின் திரைக்கதையில் திலகன், நெடுமுடி வேணுவுடன் நடித்த பெருந்தச்சன். விருது வாங்கிய திரைப்படம். அதையடுத்து பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள். அடுத்து ஆர்.கே.செல்வமணியின் செம்பருத்தி. ரோஜா நாயகியாக அறிமுகமான படம். எல்லாமே ஹிட்.

    மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா, ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் என்று முன்னணி இயக்குனர்கள் அனைவரது இயக்கத்திலும் அந்த காலத்தில் நடித்த ஒரே நடிகர் பிரசாந்த். அவரது திருமணமும், அதற்குப் பின் ஏற்பட்ட களேபரமும், விவாகரத்தும் பிரசாந்தின் திரை வாழ்க்கையை பாதித்தன. அதிலிருந்து இன்றுவரை அவரால் மீள முடியவில்லை என்பது கசப்பான உண்மை.

    பிரசாந்த் தற்போது அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இது ஸ்ரீராம் ராகவன் இந்தியில் இயக்கிய அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்து, இயக்கியுள்ளார். இதற்குமுன் மம்பட்டியான படத்தையும் அவர்தான் இயக்கினார்.

    அடுத்து பிரசாந்த் நடிக்கப் போகும் படத்தையும் அவரே இயக்க இருக்கிறார். படத்திற்கு சல்யூட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மேலதிக தகவல்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர்.

    ரஜினி, கமலே ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் என இளைய தலைமுறைக்கு வாய்ப்புகள் அளிக்கிறார்கள். காலத்துக்கு இயைந்து செல்லாவிட்டால் காலம் நம்மை அடித்துச் செல்லும் என்ற புரிதல் அவர்களுக்கு உள்ளது. தியாகராஜனும் பிரசாந்தை இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டும். செய்வாரா...?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: