• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரச்சனை செய்யும் பிவிஆர் - அக்ஷய் குமார் படம் வெளியாவதில் சிக்கல்!

பிரச்சனை செய்யும் பிவிஆர் - அக்ஷய் குமார் படம் வெளியாவதில் சிக்கல்!

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

மல்டிபிளக்ஸ்களை பொறுத்தவரை இந்தப் படத்துக்கு விட்டுக் கொடுத்தால் அனைத்துப் படத்துக்கும் இதே சதவீதத்தை கேட்பார்கள் என இறங்கி வராமல் இருக்கிறார்கள். 

  • News18
  • Last Updated :
  • Share this:
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில், அக்ஷய் குமார் நடித்திருக்கும் சூரியவான்ஷி திரைப்படம் இன்று வெளியாகியிருக்க வேண்டும். பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ்களுடன் வசூலை ஷேர் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இன்னும் முன்பதிவு தொடங்கப்படாமல் உள்ளது.

அக்ஷய் குமாரின் பெல்பாட்டம் வெளியான போது மகாராஷ்ட்ரா உள்பட பல முக்கிய மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கவில்லை. அதனால் மிகக்குறைந்த வசூலையே அப்படம் பெற்றது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், இந்தியின் முதல் மெகா பட்ஜெட் படமாக சூரியவான்ஷி வெளியாகிறது. கமர்ஷியல் கிங் என்று சொல்லப்படுகிற ரோஹித் ஷெட்டி படத்தை இயக்கியிருக்கிறார். பெரிய ஹிட்டை திரையுலகம் எதிர்பார்க்கிறது.

வசூலை ஷேர் செய்வதில் தயாரிப்புத் தரப்புக்கும் பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ்களுக்கும் இடையில் நவம்பர் 1 நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. டிக்கெட் கட்டணத்தில் 60 சதவீதத்தை தயாரிப்பாளர் முதல்வாரம் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. மல்டிபிளக்ஸ்கள் 52.5 சதவீதத்தில் நிற்கின்றன. இன்றுவரை இந்தப் பிரச்சனை முடிவுக்கு வராததால் குறிப்பிட்ட இந்த மல்டிபிளக்ஸ்களில் இன்னும் முன்பதிவு ஆரம்பிக்கவில்லை. அதேநேரம், கார்னிவால், மூவி டைம், மேக்சஸ், கோல்ட், முக்தா, வேவ் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ்கள் முன்பதிவை ஆரம்பித்துள்ளன. பிவிஆர், ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ்கள்தான் இந்தியாவில் பெரியவை. 1500 க்கும் மேற்பட்ட திரைகளை இவை வைத்துள்ளன. இவற்றில் படம் வெளியாகாவிட்டால் அது பேரிழப்பாக இருக்கும்.

Also read... சம்பளத்தை உயர்த்திய சமந்தா...!

மல்டிபிளக்ஸ்களை பொறுத்தவரை இந்தப் படத்துக்கு விட்டுக் கொடுத்தால் அனைத்துப் படத்துக்கும் இதே சதவீதத்தை கேட்பார்கள் என இறங்கி வராமல் இருக்கிறார்கள்

சூரியவான்ஷி நாளை இந்தியா உள்பட 67 நாடுகளில் நாளை வெளியாகிறது. வெளிநாடுகளில் மட்டும் 1300 திரையரங்குகள். இதில் யுஎஸ்ஸில் 540 திரையரங்குகள். யுஏஇ யில் 137 திரையரங்குகள். அதற்கு அடுத்தபடியாக ஆஸ்ட்ரேலியாவில் 107 திரையரங்குகள். இவை தவிர பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்பட 66 நாடுகளில் வெளியாகிறதுதற்போதுவரை இந்திய வெளியீடுதான் பிரச்சனையில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: