ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் தளபதி 67 படத்தில் இணைகிறாரா இந்த மலையாள முன்னணி நடிகர்?

விஜய்யின் தளபதி 67 படத்தில் இணைகிறாரா இந்த மலையாள முன்னணி நடிகர்?

லோகேஷ் கனகராஜ் - விஜய்

லோகேஷ் கனகராஜ் - விஜய்

தளபதி 67 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக கூடும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    விஜய்யின் தளபதி 67 படத்தில் நடிப்பதாக இருந்த மலையாள முன்னணி நடிகர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்னொரு முன்னணி நடிகர் படத்தில் இடம்பெற பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67-ஆவது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு தளபதி 67 என ஒர்க்கிங் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

    விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த லோகேஷ் கனகராஜ், முழுநீள தீவிர ஆக்சன் படமாக தளபதி67 அமையும் என்று கூறியிருந்தார். இதனால் எதிர்பார்ப்பு எகிறியது.

    "நான் இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்... விரைவில் குணமடைவேன்.." ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சமந்தா.!

    இந்தப்படத்தில் டான் கேரக்டரில் விஜய் நடிப்பதாக தெரிகிறது. இதற்காக படத்தில் வலுவான் வில்லன்கள் இருக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளார். இதையொட்டி கேஜிஎஃப் படத்தில் வில்லனாக கவனம் ஈர்த்த சஞ்சய்தத், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரகாஷ்ராஜ், மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என்று தகவல்கள் வெளிவந்தன.

    இந்நிலையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிகர் பிரித்விராஜ் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

    ‘வாரிசு’ படத்தின் அடுத்த அப்டேட்… இசை உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்…

    இதையடுத்து மற்றொரு முன்னணி நடிகரான நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரேமம் படத்தின் மூலமாக நிவின் பாலி இந்தியா முழுக்க ரசிகர்களை பெற்றிருந்தார்.

    தமிழில் நேரம் படத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்தார். தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக கூடும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay, Lokesh Kanagaraj