முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'இப்படி தான் நீ சாகபோகிறாய்'.. ரசிகரின் கமெண்ட்டிற்கு பதிலடி கொடுத்த சமந்தா

'இப்படி தான் நீ சாகபோகிறாய்'.. ரசிகரின் கமெண்ட்டிற்கு பதிலடி கொடுத்த சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

Samantha : சமந்தா ரசிகரின் கமெண்ட் ஒன்றிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு இருக்கும் அதே ஃபேன் பேஸ் சமந்தாவிற்கும் இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பட்டைய கிளப்பி வருகிறார் சமந்தா முதன் முதலில் தமிழில் விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கு மற்றும் தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்து தற்போது தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.

சமந்தா - நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு மிகவும் நொறுங்கிவிட்டதாகவும், இந்த சோகத்தில் இருந்து மீள பல நண்பர்கள் உதவினார்கள் என சில பேட்டிகளில் கூறினார். பெர்சனல் லைஃபில் ஏற்ற,இறக்கத்துடன் இருந்தாலும் சினிமா என்று வந்துவிட்டால் சமந்தாவை அடித்துக்கொள்ள முடியாது என்று தான் கூற வேண்டும். ஆம். ஹிந்தியில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் வேற லெவலில் நடித்திருப்பார். இந்த வெப் சீரிஸிற்காக பல விருதுகளையும் பெற்றார்.அதன் பின்பு ஹிந்தியில் பட வாய்ப்புகள் வந்ததாகவும், கதை பிடிக்காமல் சமந்தா நடிக்க ஒப்புக்கொள்ள வில்லை என்றும் செய்திகள் பரவின.ஆனால் சமந்தாவுக்கு பிடித்த கதை என்றால் சமந்தா பாலிவுட்டில் நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிங்க : பழைய கண்ணம்மா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா? நீங்களே பாருங்க..




 
 

 

 


View this post on Instagram


 

 

 

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)



புது படங்கள் : சமந்தா தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். சமந்தா - விஜய் தேவரக்கொண்ட இணைந்து நடிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. யசோதா என்ற படத்திலும் நடித்து வருகிறார். சகுந்தலம் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படங்கள் வெளியாக உள்ளன.

இதையும் படிங்க : இதை ரொம்ப மிஸ் பண்ணேன் - நடிகை சமந்தா பதிவு

சமந்தா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவர் அடிக்கடி ஜிம் வொர்க் அவுட் வீடியோ, போட்டோ ஷூட் ஆகியவற்றையும் பகிர்வார். சமீபத்தில் தனது செல்லப்பிராணிகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு ஒரு ரசிகர் ‘கடைசியில் அவர் நாய் மற்றும் பூனைகளுடன் தான் சாகப்போகிறார்’ என்று கமெண்ட் செய்திருந்தார். இதை பார்த்த சமந்தா ‘என்னை அதிர்ஷ்டசாலியாக நினைத்து கொள்வேன்’ என்றுக் கூறி தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஆனால் அந்த ரசிகர் தற்போது அந்த கமெண்ட்டை நீக்கியுள்ளார்.

First published:

Tags: Actress Samantha