• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தனியாக பேய்ப்படங்கள் பார்ப்பவர்களுக்கு 1,300 டாலர்கள் பரிசு...!

தனியாக பேய்ப்படங்கள் பார்ப்பவர்களுக்கு 1,300 டாலர்கள் பரிசு...!

மாதிரி படம்

மாதிரி படம்

தனியாக இந்தப் படங்களை பார்க்கிற தைரியம் கொண்டவர்கள் செப்டம்பர் 26 க்கு முன் தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பைனான்ஸ்பஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பணம் கொடுத்து பயப்படுவதில் உலகில் முதல் இடத்தில் இருக்கிறார்கள் அமெரிக்கர்கள். இங்கு வாரத்துக்கு இரண்டு பேய்ப்படங்களாவது வெளியாகின்றன. சென்ற வாரம்கூட மலிக்னென்ட் படம் வெளியானது. 

13 பேய்ப்படங்களை தனியாகப் பார்ப்பவர்களுக்கு 1,300 அமெரிக்க டாலர்களை பரிசளிப்பதாக பைனான்ஸ்பஸ் (FinanceBuzz) நிறுவனம் அறிவித்துள்ளது. படம் பார்க்கையில் உங்களது இதயத்துடிப்பு மற்றும் பிற விவரங்கள் நிபுணர்களால் கண்காணிக்கப்படும். பரிசுத் தொகையுடன் 50 டாலர்களுக்கான கிப்ட் கார்டும் தரப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனியாக் பேய்ப்படம் பார்த்தால் பரிசு என்ற சவால் இன்று நேற்றல்ல பல வருடங்களாக இருந்து வருகிறது. 1981 இல் ஈவில் டெட் திரைப்படம் வெளியான போது இதேபோல் அறிவிப்பை வெளியிட்டனர். பலர் தனியாகப் படம் பார்த்து மாரடைப்பால் இறந்ததாகவும் வதந்திகள் கிளம்பின

உலக அளவில் ரசிகர்களை பயமுறுத்திய 13 படங்களை இதற்கென தேர்வு செய்துள்ளது பைனான்ஸ்பஸ் நிறுவனம்.

Saw 

Amityville Horror

A Quiet Place

A Quiet Place Part 2

Candyman

Insidious

The Blair Witch Project

Sinister

Get Out 

The Purge 

Halloween (2018) 

Paranormal Activity 

Annabelle

Also read... இந்தியாவில் 1000 திரையரங்குகளில் வெளியாகும் ஹாலிவுட் படம்...!

இவைதான் அந்தப் படங்கள். இதில் ஜேஸ் வான் இயக்கிய படங்கள் மட்டும் இரண்டு உள்ளன. சமீபத்தில் அதிகம் பயமுறுத்திய இவரது  தி கான்சூரிங் இதில் இடம்பெறவில்லை

தனியாக இந்தப் படங்களை பார்க்கிற தைரியம் கொண்டவர்கள் செப்டம்பர் 26 க்கு முன் தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க பைனான்ஸ்பஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: