HOME»NEWS»ENTERTAINMENT»cinema thirumanam serial retelecast colors tamil announcement msb

‘திருமணம்’ சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கலர்ஸ் தமிழ்

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘திருமணம்’ சீரியல் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

‘திருமணம்’ சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கலர்ஸ் தமிழ்
திருமணம் சீரியல்
  • Share this:

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற தொடர்களில் ஒன்று ‘திருமணம்’. இத்தொடரில் சந்தோஷ் மற்றும் ஜனனி கேரக்டர்களில் சித்து - ஸ்ரேயா ஜோடி நடித்திருந்தது. இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.  சீரியலைத் தாண்டி உண்மையிலும் இவர்கள் காதலர்களாகவே வலம் வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில மாதங்கள் பழைய எபிசோட்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டு மீண்டும் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதையடுத்து திருமணம் தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் அக்டோபர் 16-ம் தேதியுடன் ‘திருமணம்’ தொடர் நிறைவு பெறுவதாக கலர்ஸ் தமிழ் அறிவித்தது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். அதேவேளையில் இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

மேலும் படிக்க: ‘ஈஸ்வரன்’ டப்பிங்கை முடித்த சிம்பு - வாய் மேல் விரல் வைத்த ரசிகர்கள்



இந்நிலையில் நவம்பர் 9-ம் தேதி முதல் ‘திருமணம்’ சீரியல் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்று கலர்ஸ் தமிழ் குட் நியூஸ் சொல்லியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: