நினைத்த நேரத்தில் பிடித்த படத்தை பார்க்க வருகிறது ரீகல் டாக்கீஸ்

ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாக ஆரம்பத்திருக்கும் நிலையில் புதிய முயற்சியை கையிலெடுத்துள்ளது ரீகல் டாக்கீஸ்.

நினைத்த நேரத்தில் பிடித்த படத்தை பார்க்க வருகிறது ரீகல் டாக்கீஸ்
ரீகல் டாக்கீஸ்
  • Share this:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களைக் கைப்பற்றும் ஓடிடி தளங்கள் டிஜிட்டலில் ரிலீஸ் செய்து வருகின்றன. அந்த வகையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள் டிஜிட்டலில் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

அடுத்தடுத்து சிறிய பட்ஜெட் படங்களும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில், புதிய தொழில்நுட்ப முயற்சியை கையிலெடுத்துள்ளது திருக்குமரன் என்டர்டெயிமெண்ட் நிறுவனம்.

அட்டகத்தி, பிட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் ‘தியேட்டர் TO ஹோம்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை ‘ரீகல் டாக்கீஸ்' என்ற பெயரில் தனது அடுத்த முயற்சியை விரைவில் துவங்குகிறது.


வீட்டிலிருந்து வசதியாக தாங்கள் நினைத்த, நினைக்கும் படங்களை நினைக்கும் நேரத்தில் பார்க்கும்படியாக படத்திற்கு ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற விதிமுறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சாத்தான்குளம் சம்பவம் - ஜெயராஜ் குடும்பத்திடம் உருக்கமாக பேசிய ரஜினி

நேரடி திரைப்படங்கள், ஒரிஜினல் கதையம்சமுள்ள தனித்துவமான படங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பற்றிய விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. ரீகல் டாக்கீஸ்' ஜுலை வெளியீட்டிற்காக வெகுவேகமாக உருவாகிறது.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading