சி.வி.குமார், ஞானவேல்ராஜா இணைந்து தயாரிக்கும் புதிய படம்!

சி.வி.குமார், ஞானவேல்ராஜா

பத்து முன்னணி இயக்குனர்கள் இணைந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்க முன்வந்திருக்கும் நேரத்தில், இரு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து படம் தயாரிக்கின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமாரும், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கின்றனர். இவர்கள் இணைந்து மேலும் பல படங்களை தயாரிக்க உள்ளனர்.

ஸ்டுடியோ கிரீனின் புதிய நிர்வாகியாக தயாரிப்பாளர் தனஞ்செயன் பொறுப்பேற்றுள்ளார். மோசர் பேர், யுடிவி என பல தயாரிப்பு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்த தனஞ்செயன் சமீபத்தில்தான் சோனிலிவ் ஓடிடி தளத்தின் தமிழக நிர்வாகப் பொறுப்புக்கு வந்தார். இந்நிலையில், அதனை உதறிவிட்டு ஸ்டுடியோ கிரீனின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, ஸ்டுடியோ கிரீன், சி.வி.குமாருடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. அண்டாவைகோணோம் படத்தை இயக்கிய வடிவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். இதற்கான ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாகியுள்ளது. விரைவில் படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து அறிவிக்க உள்ளனர்.

Also read... எனிமி படத்தின் வெளியீடு எப்போது? - அறிவித்தார் விஷால்

பத்து முன்னணி இயக்குனர்கள் இணைந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்க முன்வந்திருக்கும் நேரத்தில், இரு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து படம் தயாரிக்கின்றன. லாபத்தையும், நஷ்டத்தையும், வேலைகளையும் பகிர்ந்து கொள்ள இது நல்ல வழி. கடைசிவரை கூட்டணி உடையாமல் இருக்க வேண்டும்.
Published by:Vinothini Aandisamy
First published: