ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திருச்சிற்றம்பலம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போ? படக்குழு வெளியிட்ட அப்டேட்!

திருச்சிற்றம்பலம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போ? படக்குழு வெளியிட்ட அப்டேட்!

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை அண்மையில் வெளியிட்ட படக்குழு தற்போது அதன் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் அப்டேட் அண்மையில் வெளியான நிலையில் அந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது என்று படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகிய மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் இந்த படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ரசிகர்கள் இப்படத்தின் இசை எவ்வாறு அமைந்துள்ளது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Also read... வெங்கட் பிரபு படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா யுவன் சங்கர் ராஜா

இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை அண்மையில் வெளியிட்ட படக்குழு தற்போது அதன் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் பாடல் வருகிற ஜூன் 24-ந் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். தாய்க்கிழவி என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை தனுஷ் பாடியுள்ளதோடு பாடல் வரிகளையும் அவரே எழுதி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor dhanush, Anirudh, Entertainment