Home /News /entertainment /

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு… ஆக. 18-ல் படம் ரிலீஸ்

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு… ஆக. 18-ல் படம் ரிலீஸ்

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ்

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ்

சமீப காலமாக ஆக்சன் திரைப்படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளிவந்துள்ள நிலையில், ஃபீல் குட் ஜேனரில் திருச்சிற்றம்பலம் உருவாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. படம் அடுத்த வாரம் வியாழன் அன்று திரைக்கு வருகிறது.

    நடிகர் தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் - இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

    விஜய் தலைமையில் நடந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் இரண்டாவது திருமணம்!

    திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ லான்ச் நடந்து முடிந்துள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் ட்ரெய்லரும் கவனம் ஈர்த்து வருகிறது.

    சமீப காலமாக ஆக்சன் திரைப்படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளிவந்துள்ள நிலையில், ஃபீல் குட் ஜேனரில் திருச்சிற்றம்பலம் உருவாகியுள்ளது. அடுத்த வாரம் வியாழன் அன்று படம் வெளியாகிறது.

    பாரதி கண்ணம்மா வினுஷா இவ்வளவு அழகா!

    இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதாவது 12 வயதுக்கு உட்பட்டவர்கள் பெரியவர்களின் துணையோடு படத்தை பார்க்கலாம் என்பது யு/ஏ-க்கு அர்த்தமாகும்.

    படம் வெளியாக இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் புரொமோஷன் பணிகளை படக்குழுவினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி