Home /News /entertainment /

Thiruchitrambalam box office Collection: வசூலை குவிக்கும் தனுஷின் திருச்சிற்றம்பலம்!

Thiruchitrambalam box office Collection: வசூலை குவிக்கும் தனுஷின் திருச்சிற்றம்பலம்!

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடியைத் தாண்டியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வசூல் மழை பொழிந்து வருகிறது.

    மித்ரன் ஆர். ஜவஹரின் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் கடந்த வாரம் வெளியானது. இதில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படமாக இது உருவெடுத்துள்ளதாக திரை விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    சமீபத்திய தகவல்களின்படி, இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடியைத் தாண்டியுள்ளது. அதோடு சொந்த மாநிலத்தில் அதிக வசூல் செய்த தனுஷ் படமாகவும் இது மாறியுள்ளது. ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம், முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் 51.42 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக ட்ரேட் அனலிஸ்ட் மனோபாலா விஜயபாலன் தெரிவித்துள்ளார்.

    யாத்ரா தனுஷ் ஸ்போர்ட்ஸ் கேப்டன்... துணை கேப்டன் எந்த நடிகரின் மகள் தெரியுமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    ஆகஸ்ட் 24 வரை, தனுஷின் திருச்சிற்றம்பலம் தெலுங்கு மாநிலங்கள் மற்றும் ஓவர்சீஸில் ரூ 1.9 கோடி வசூலித்துள்ளது. அதோடு மலேசியா, வளைகுடா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் ரூ 9.2 கோடி வசூலித்துள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor dhanush, Nithya menon

    அடுத்த செய்தி