Home /News /entertainment /

தனுஷின் திருசிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்

தனுஷின் திருசிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகிய மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
    தனுஷின் திருசிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.

    இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகிய மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் இந்த படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ரசிகர்கள் இப்படத்தின் இசை எவ்வாறு அமைந்துள்ளது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    இந்தப் படத்தின் முதல் சிங்கிளான தாய் கிழவி பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்தப் பாடல் வீடியோ யூ-ட்யூபில் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.

    Also read... துல்கர் சல்மானின் ’சீதா ராமம்’ படத்தில் குருமுகில் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு!

    இந்நிலையில் திருசிற்றம்பலம் படத்தில் இசை வெளியீட்டு விழா தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Dhanush, Dhanush Movie

    அடுத்த செய்தி