’திமிரு புடிச்சவன்’ பட காட்சிகள் இணையத்தில் ரிலீஸ்

திமிரு புடிச்சவன் படத்தின் 4 நிமிட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

’திமிரு புடிச்சவன்’ பட காட்சிகள் இணையத்தில் ரிலீஸ்
திமிருபிடிச்சவன் படத்தின் காட்சி
  • News18
  • Last Updated: November 15, 2018, 5:21 PM IST
  • Share this:
திமிரு புடிச்சவன் படத்தின் 4 நிமிட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நம்பியார் படத்தை இயக்கிய கணேஷா தற்போது விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. சர்கார் படம் அதிகமான திரையரங்குகளில் வெளியானதால் திமிரு புடிச்சவன் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டதாக விஜய் ஆண்டனியின் மனைவி தெரிவித்திருந்தார்.


நகுல் நடிப்பில் வரும் 16- ம் தேதி வெளியாக இருந்த செய் படக்குழுவினர் ரிலீஸிலிருந்து பின்வாங்கியதால் தற்போது திமிரு புடிச்சவன் திரைப்படம் நவம்பர் 16-ம் தேதி வெளியாவது உறுதியாகியிருக்கிறது.



இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி சாலையில் வழிந்தோடும் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.கோலிவுட்டில் என்ன நடக்கிறது? தெரிஞ்சுக்க கிளிக் செய்க

பார்க்க:

செல்போன் கடைக்குள் புகுந்து பதற்றமில்லாமல் திருடிய கும்பல் சிசிடிவி வீடியோ

First published: November 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading