விஷாலுக்கு வில்லனாக விருப்பமா? - இதே ஒரு வாய்ப்பு...!

விஷால்

விஷால் நடிப்பில் எனிமி படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சின்ன பட்ஜெட் படங்களுக்குதான் நடிகர்கள் தேவை என்று விளம்பரம் கொடுப்பார்கள். காலம் மாறிவிட்டது. சித்தார்த் நடிக்கும் படத்துக்கு நடிக்க ஆள்கள் தேவை என்று விளம்பரம் செய்தனர். இப்போது விஷால் படத்துக்கும் ஆள்கள் தேவைப்படுகிறார்கள்.

விஷால் நடிப்பில் எனிமி படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அத்தடன், விஷாலின் 31 வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பல வாரங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் விஷாலின் 32 வது படத்துக்கு நடிகர்கள் தேவை என விளம்பரம் தந்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த 32 வது படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது. இதில் வில்லனாக நடிக்க 5.8 முதல் 6.2 வரை உயரமுள்ள வெள்ளை நிறம் கொண்ட ஆண் நடிகர் தேவை. வயது 25 - 30 க்குள் இருக்க வேண்டும். பார்த்தாலே வில்லன் போல் தோன்றினால் கூடுதல் சிறப்பு.6 முதல் 9 வயதுள்ள சிறுவனும் தேவைப்படுகிறான். மாநிறத்தில், மெலிந்த உடல்வாகுடன் சராசரி உயரம் கொண்டிருக்க வேண்டும். பிளாஷ்பேக் காட்சியில் சின்ன வயது விஷாலாக நடிப்பதற்கு இருக்கலாம். இதையடுத்து 16 முதல் 20 வயதுள்ள இளம்பெண்ணும் தேவைப்படுகிறார். ஒல்லியான தோற்றத்தில் சராசரி உயரம் இருந்தால் போதுமானது

Also read... சிம்பு நடிக்கும் கொரோனா குமார்...!

இந்தப் படம் தமிழ், தெலுங்கு இருமொழிகளில் எடுக்கப்படுவதால் தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத்தைச் சோந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எப்படி விஷாலை தொடர்பு கொள்வது என்பதை விளம்பரத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Published by:Vinothini Aandisamy
First published: