ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

’மேரேஜுக்காக 4 வருஷம் காத்திருந்தாங்க’.. சூர்யா-ஜோதிகா குறித்து மனம் திறந்த சிவக்குமார்!

’மேரேஜுக்காக 4 வருஷம் காத்திருந்தாங்க’.. சூர்யா-ஜோதிகா குறித்து மனம் திறந்த சிவக்குமார்!

சூர்யா, சிவகுமார்

சூர்யா, சிவகுமார்

சூர்யாவும் ஜோதிகாவும் 14 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  திருமணங்கள் என்றாலே அழகான உணர்வுதான். அதுவும் செலிபிரிட்டிகளின் திருமணம் என்றால் சினிமா ரசிகர்கள் குதூகலித்துதான் போவார்கள். அப்படியான செலிபிரிட்டி ஜோடிகள் தமிழில் பலர் உண்டு. அதில் மிக முக்கியமானவர்கள் சூர்யா-ஜோதிகா. ஆரம்பக்காலங்களில் ஒன்றாக நடித்தபோதே அழகான ஜோடி என்று ரசிகர்களால் பேசப்பட்டவர்கள் இவர்கள். பின்னர் இந்த ஜோடி ரீலில் மட்டுமில்லாமல் ரியலிலும் ஜோடியானது. இருவருக்கும் திருமணம் நடந்து 16 வருடங்களுக்கு மேல் ஆனாலும் இன்றும் கபுல்ஸ் கோல் என்ற தம்பதியாக இருவரும் வாழ்ந்து வருகின்றனர். அழகான காதல் திருமணம் என்றாலும் அவர்களும் இந்த திருமணத்துக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்துள்ளனர். அந்த தகவலை சூர்யாவின் தந்தை சிவக்குமாரே யூடியூப் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

  சூர்யாவும் ஜோதிகாவும் 16 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சூர்யா ஜோதிகா கல்யாணம் அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை.  தங்களுடைய  கல்யாணத்திற்காக சூர்யாவும், ஜோதிகாவும் நான்கு வருடங்கள் காத்திருந்தனர்.

  டௌரிஸ்ட் டல்கிஸ் யூடூப் சேனலில் அவர் கொடுத்த பேட்டியில் சூர்யாவும் ஜோதிகாவும் திருமணம் செய்ய நான்கு வருடங்கள் காத்திருந்தனர் என்றார். சிவக்குமார் அந்த பேட்டியில் ''190 படம் நடித்து உள்ளேன். அதில் 150 படத்தில் காதல் காட்சிகளில் நடித்து இருப்பேன். 150 படத்தில் காதல் வசனம் பேசியுள்ளேன். இப்படி 150 பெண்களையும் காதலித்தேன். ஆனால் சூர்யா ஒரே ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்ய வேண்டும் என்று சொல்லும்போது எப்படி வேண்டாம் என்று சொல்வது. அது என்ன தர்மம்?

  Read More: இயக்குநர் ராமின் உதவியாளர் இயக்கியுள்ள பருந்தாகுது ஊர்க்குருவி!

  நாம் மௌனம்தான் காக்க வேண்டும். அவர் வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையை நாம் கொடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

  2006ம் ஆண்டு ஜோதிகாவை கரம் பிடித்தார் சூர்யா. அவர்களின் அன்புக்கு பாத்திரமாக தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில்கூட டெல்லியில் நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டு   சூர்யாவும், ஜோதிகாவும்  விருது பெற்றனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actor Surya, Actress Jothika, Kollywood, Shivakumar, Tamil Cinema