ஓடிடி தளங்களின் மிகப்பெரிய சந்தையாக மாறியிருக்கிறது இந்தியா. சர்வதேச கார்ப்பரேட் ஒடிடி நிறுவனங்கள் பெருமளவில் இந்தியாவில் முதலீடு செய்கின்றன.
கொரோனா பெரும்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது ஓடிடி தளங்களுக்கு உரமாக அமைந்தன. கடந்த இரண்டு வருடங்களில் ஓடிடி தளங்கள் ஆல்போல் தழைத்து இந்திய சந்தையில் ஆழமாக வேரூன்றி உள்ளன.டிஸ்னி + ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, சோனிலிவ் போன்ற சர்வதேச ஓடிடி தளங்களின் முக்கிய சந்தையாக இந்தியா பார்க்கப்படுகிறது.
ஆஹா, ஆல்ட் பாலாஜி, சன் நெக்ஸ்ட், ஸீ5 போன்ற இந்திய ஒடிடி தளங்களும் தங்களது வியாபார எல்லைகளை விஸ்தரித்து வருகின்றன. டென்ட் கொட்டாய் போன்ற பிராந்திய ஓடிடி தளங்களும் படங்களை வெளியிடுவதில் போட்டியிடுகின்றன. இந்த கடுமையான பந்தயத்தில் முந்துகின்ற 3 முக்கிய ஒடிடி தளங்களும் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களாகும்.
மூன்றாவது இடத்தில் 5 மில்லியன் - அதாவது 50 லட்சம் சந்தாதாரர்களுடன் நெட்பிளிக்ஸ் உள்ளது. இரண்டாவது இடத்தில் அமேசான் பிரைம் விடியோ உள்ளது. இவர்கள் 19 மில்லியன் சந்தாதாரர்களை இந்தியாவில் பெற்றிருக்கிறார்கள். அதாவது 1.9 கோடி சந்தாதாரர்கள். முதலிடத்தை பிடித்திருப்பது டிஸ்னி + ஹாட்ஸ்டார். இவர்கள் 46 மில்லியன் சந்தாதாரர்களுடன் போட்டியில் முன்னணியில் உள்ளனர்.
4.6 கோடி சந்தாதாரர்கள் என்பது உலகின் மிகப்பெரிய ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ்க்கே எட்டா கனவாக உள்ளது. இந்த குறைவான சந்தாதாரர்கள் காரணமாகத்தான் நெட்பிளிக்ஸ் தனது சந்தா கட்டணத்தை பெருமளவு குறைத்தது. ஆனாலும் அவர்களால் எதிர்பார்த்ததில் 20 சதவீத டார்கெட்டையே இதுவரை கைப்பற்ற முடிந்திருக்கிறது.
சன் டிவி சீரியல் நடிகையை இன்ஸ்டாகிராமில் ஃபலோ பண்ணும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!
இந்திய சந்தையின் மனநிலையை நெட்பிளிக்ஸால் இன்னும் சரிவர உணர்ந்துகொள்ள முடியவில்லை. அதேநேரம் சோனிலிவ் ஓடிடி தளம் அதிக அளவில் சந்தாதாரர்களை பெற்று வருகிறது. விரைவில் இது நெட்பிளிக்ஸை தாண்டிச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் வெளியான எந்த தமிழ், தெலுங்கு திரைப்படமும் திரையரங்கில் வசூலை பெறவில்லை.
ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ்... கதையைக் கேட்டு கண்ணீர் விட்ட கஸ்தூரி ராஜா?
இரண்டாம் மூன்றாம் கட்ட நடிகர்களின் திரைப்படங்கள் எப்படியும் மூன்று வாரங்களில் ஓடிடி தளத்துக்கு வந்து விடும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற ரசிகர்களின் மனோநிலை இதற்கு முக்கிய காரணம். ஓடிடிகளின் போட்டி ஒருபுறமிருக்க திரையரங்குகள் தங்கள் வருமானத்தை இழந்து வரும் சூழலும் தீவிரமாகி வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.