• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எனது அடுத்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் இவர்கள் தான் - பிரபு சாலமன்

எனது அடுத்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் இவர்கள் தான் - பிரபு சாலமன்

பிரபு சாலமன்

பிரபு சாலமன்

எனது அடுத்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒரு மூதாட்டி என்றும்  அவர்கள் ஒரு நூலகம் என்றும் திரைப்பட இயக்குநர் பிரபு சாலமன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு திருச்சி குண்டூரில் உள்ள அன்பாலயம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் முதியோர்களுக்கென *நரை ஓவியம்* என்கிற பிரத்யேக யூ ட்யூப் சேனல் தொடக்க விழா  நடைபெற்றது. பேராசிரியர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,திரைப்பட இயக்குநர் பிரபு சாலமன் சேனலைத் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் பிரபு சாலமன் பேசுகையில், எனது அடுத்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒரு மூதாட்டி. இதற்காக பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக தேடினோம். அந்த தேடலையே ஒரு படமாக்கும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கிறது. குறிப்பாக, நிறைய முதியவர்களை சந்திக்கவும் அவர்களிடம் உரையாடினேன். அவர்களிடமிருந்து நிறைய அனுபவங்களைப் பெற்றுக் கொண்டோம். அவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். முதியவர்களிடம் பொய், புரட்டு. வஞ்சம், வன்மம் எதுவும் இல்லை.

முதியவர்களிடம் சொல்லப்படாத கதைகள் புதைந்து கிடக்கின்றன. நிறைய அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன.  அவர்கள் ஒரு நூலகம். அவர்களின் கைகளை நாம் பற்றிக் கொள்ள வேண்டும் என்றார் திரைப்பட இயக்குநர் பிரபு சாலமன்.

Also Read : லைகா தயாரிப்பில் புதிய படம் இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்...!

தொடர்ந்து விழாவில் பங்கேற்றிருந்த முதியோர்கள் அனைவருக்கும் கதராடை அணிவித்து, கவுரவிக்கப்பட்டனர். காவல் உதவி ஆணையர் அப்துல் கபூர், இந்து மிஷன் மருத்துவமனை செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவின் நிறைவாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீராங்கனை தனலட்சுமி பாராட்டும், சன்மானமும் வழங்கப்பட்டது.

நரை ஓவியம் யூ ட்யூப் சானல் மூலம் முதியோர்களின் அனுபவம், அன்பு பகிர்வு, உரையாடல்கள் குறித்து குறும்பட போட்டிகள் நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: