முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH - 'மலையும் மணலும் சகவாசி'.. ரஹ்மானின் மகள் பாடிய புதிய பாடல்!

WATCH - 'மலையும் மணலும் சகவாசி'.. ரஹ்மானின் மகள் பாடிய புதிய பாடல்!

அறிவு - கதீஜா ரஹ்மான்

அறிவு - கதீஜா ரஹ்மான்

கோக் ஸ்டூடியோஸ் தமிழ் சீசன் ஒன்றின் முதல் பாடலாக இப்பாடல் வெளியாகியிருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராப் பாடகர் தெருக்குரல் அறிவு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா ரஹ்மான் இருவரும் இணைந்து கோக் ஸ்டூடியோவிற்காக ‘சகவாசி’ என்ற பாடலை பாடியுள்ளனர். காலா படத்தில் ‘உரிமை மீட்போம்’, வட சென்னை படத்தில் ‘மத்திய சிறையிலே’, மாஸ்டர் படத்தில் ‘வாத்தி ரெய்டு’, சார்பட்டா பரம்பரைய்ல் ‘நீயே ஒளி’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் ரேப் பாடகர் அறிவு. அதோடு, தெருக்குரல், என்ஜாய் எஞ்சாமி உள்ளிட்ட ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா ரஹ்மானும் திரைப்படங்கள் மற்றும் ஆல்பங்களில் பாடி வருகிறார்.

தற்போது அறிவும், கதீஜாவும் இணைந்து சகவாசி என்ற பாடலை பாடியுள்ளனர். கோக் ஸ்டூடியோஸ் தமிழ் சீசன் ஒன்றின் முதல் பாடலாக இப்பாடல் வெளியாகியிருக்கிறது. பாடலை எழுதி, கம்போஸ் செய்து பாடியிருக்கிறார் அறிவு. அவருடன் இணைந்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும் இப்பாடலில் பணி புரிந்துள்ளார்.

' isDesktop="true" id="883660" youtubeid="Vb6pyPmbJrw" category="cinema">

மலையும் மணலும் சகவாசி, அலையும் கடலும் சகவாசி என இயற்கையை சகவாசியாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Youtube