Home /News /entertainment /

தூங்கும்போது தான் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படும், இறுதியில் உண்மை வெல்லும் - என்ஜாய் எஞ்சாமி பாடகர் அறிவு

தூங்கும்போது தான் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படும், இறுதியில் உண்மை வெல்லும் - என்ஜாய் எஞ்சாமி பாடகர் அறிவு

பாடகர் அறிவு

பாடகர் அறிவு

நீங்கள் தூங்கும் போதுதான் உங்கள் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன, விழித்திருக்கும்போது அல்ல.

  சில தினங்களுக்கு முன்பு நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சியில் என்ஜாய் எஞ்சாமி பாடல், பாடகர் அறிவு இல்லாமல் மேடையில் பாடப்பட்ட நிலையில், தற்போது அவர் வெளியிட்டிருக்கும் சமூக வலைதள பதிவு பேசு பொருளாகியிருக்கிறது. 

  பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியானது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த இப்பாடல், யூ-ட்யூபில் இதுவரை 429 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் தயாரித்திருந்த இந்தப் பாடல், ஏ.ஆர்.ரஹ்மானின் மாஜ்ஜா தளத்தில் வெளியானது.

  இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சியில் என்ஜாய் எஞ்சாமி பாடல் பாடப்பட்டது. அதனை பாடகிகள் தீ-யும், கிடாக்குழி மாரியம்மாளும் பாடினர். மேடையில் அறிவு இல்லாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

  இந்நிலையில் தற்போது தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அறிவு, “இப்பாடலை எழுதி, கம்போஸ் செய்து பாடியது நான். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. ஆனால் இதை எழுதுவதற்கு யாரும் எனக்கு மெட்டுகள் தரவில்லை, ஒரு வார்த்தையைக்கூட யாரும் தரவில்லை. கிட்டதட்ட 6 மாதங்களாக தூங்காமல் கடுமையாக இதற்காக உழைத்திருக்கிறேன்.   
  View this post on Instagram

   

  A post shared by Arivu (@therukural)


  இப்பாடல் வள்ளியம்மாள் அல்லது நிலம் இல்லாத தேயிலைத் தொழிலாளர்களைப் பற்றியது மட்டுமல்ல. என்னுடைய எல்லாப் பாடல்களும் ஒடுக்கப்பட்டத் தலைமுறைகளின் வலியைப் பற்றியது. இது போல் இன்னும் 10,000 நாட்டுப்புறப் பாடல்கள் இந்த மண்ணில் இருந்துள்ளது. இவை அனைத்தும் நம் முன்னோர்களின் வாழ்வியல், அவர்களின் நிலம் பற்றியது. இப்பாடலை இன்று அனைவரும் ஒரு அழகானப் பாடலாகப் பார்க்கிறார்கள். பல தலைமுறைகளின் வியர்வையும் இரத்தமும் கலந்த வலியைக் கேட்கும் படி இனிமையான பாடலாக உருவாக்கியுள்ளோம். நம் மரபுகளைப் பாடல் வழியாகக் கடத்தியுள்ளோம்.

  சென்னை வேண்டாம்... முடிவை மாற்றிய வாரிசு குழுவினர்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நீங்கள் தூங்கும் போதுதான் உங்கள் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன, விழித்திருக்கும்போது அல்ல. ஜெய்பீம். கடைசியில் உண்மை தான் எப்போதும் வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அறிவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகிறது.
  Published by:Shalini C
  First published:

  Tags: Tamil Cinema

  அடுத்த செய்தி