’ஆபாசமாக ஒன்றும் இல்லை’: பிரியங்கா சோப்ராவின் மேலாடையில்லாத சேலை குறித்து விளக்கம்!

அந்தச் சேலையில் எந்த ஆபாசமும் இல்லை. மேலைடையில்லாத சேலைதான் தற்போது உலக செய்தியாக உள்ளது.

news18
Updated: June 9, 2019, 9:48 PM IST
’ஆபாசமாக ஒன்றும் இல்லை’: பிரியங்கா சோப்ராவின் மேலாடையில்லாத சேலை குறித்து விளக்கம்!
பிரியங்கா சோப்ரா
news18
Updated: June 9, 2019, 9:48 PM IST
மேலாடையின்றி பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் சேலை ஒன்றும் ஆபாசமாக இல்லை என்று அந்த உடையின் வடிவமைப்பாளர் தருண் தஹிலானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இன்ஸ்டைல்(InStyle) ஃபேஷன் இதழின் சமீபத்திய பதிப்பின் அட்டைப் படமாக பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மேலாடையின்றி சேலை அணிந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அந்தப் புகைப்படத்துக்கு வரவேற்பு கிடைத்தாலும், கடுமையான எதிர்ப்புகளும் எழுந்தன. நெட்டீசன்கள் பலரும் உடை ஆபாசமாக உள்ளதாக கருத்து பதிவிட்டனர்.

இந்த நிலையில், மிட்-டே(Mid-day) என்ற இணையத்துக்கு பேட்டியளித்த மேலாடையில்லாத சேலையின் உடை வடிவமைப்பாளர் தருன் தஹிலானி, ‘அந்தச் சேலையில் எந்த ஆபாசமும் இல்லை. மேலைடையில்லாத சேலைதான் தற்போது உலக செய்தியாக உள்ளது. அந்த இதழின் அட்டைப் படம், பிரியங்கா சோப்ராவின் மயக்கும் அழகால்தான் பேசப்படுகிறது. பிரியங்கா சோப்ரா, மாடர்ன் இந்தியாவின் அடையாளம்’ என்று தெரிவித்துள்ளார். இந்தச் சேலை குறித்து தெரிவித்திருந்த பிரியங்கா சோப்ரா, ‘இந்தச் சேலை எனக்கு விருப்பமான உடைகளில் ஒன்று’ என்று குறிப்பிட்டிருந்தார்.Also see:

First published: June 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...