• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சந்தானத்தின் சபாபதி ஹாலிவுட் காப்பியா?

சந்தானத்தின் சபாபதி ஹாலிவுட் காப்பியா?

சபாபதி

சபாபதி

சந்தானத்துடன் புகழ், எம்.எஸ்.பாஸ்கர், சாயாஷி ஷிண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாச ராவ் படத்தை இயக்க சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சந்தானம் நடித்திருக்கும் சபாபதி படம் நவம்பர் 19 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படம் ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று ஒரு செய்தி உலவுகிறது. அது உண்மையா?

சபாபதியில் வேலையில்லாத திக்குவாய் இளைஞனாக சந்தானம் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. வழக்கம் போல் காதலுக்கு அலையும் இளைஞன். விதி சந்தானத்துக்கு பெரும் பொருளை கொண்டு வந்து தருகிறது. கூடவே அரசியல்வாதி வடிவத்தில் பிரச்சனையையும். இதையெல்லாம் ஒன்று சேர்த்த காமெடி ட்ராமாதான் சபாபதி

சந்தானத்துடன் புகழ், எம்.எஸ்.பாஸ்கர், சாயாஷி ஷிண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாச ராவ் படத்தை இயக்க சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். சபாபதி வெளிவருமா, குறைந்தபட்சம் ஓடிடி வெளியீடாவது இருக்குமா என்று ஐயப்பட்ட நிலையில் படத்தின் விநியோக உரிமையை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் வாங்கியது. அத்துடன் நவம்பர் 19 படம் திரையரங்கில் வெளியாவதாக அறிவித்தனர். சந்தானத்தின் வழக்கமான படங்கள் போல் இல்லாமல் ஓரளவு சென்சிபிளாகவும் படம் இருப்பதாக கூறுகின்றனர்.



இந்நிலையில், ஹாலிவுட்டில் 2008 இல் வெளியான ரோல் மாடல்ஸ் திரைப்படத்தை தழுவி சபாபதி எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி இணையத்தில் உலவுகிறது. திடீரென இப்படியொரு செய்தி வெளியாக என்ன காரணம்?



சபாபதியின் புதிய போஸ்டர்தான் இந்த வதந்தி கிளம்ப காரணம். இதில் பிளாட்பார்மில் அமர்ந்து புகழ் தண்ணியடிக்க, பிளாட்பார்ம் சுவரில் சந்தானம் ஒன்றுக்கு இருப்பது போல் படம் இடம்பெற்றுள்ளது. சுவரில், 'தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்' என எழுதப்பட்டுள்ளது. இது அப்படியே ரோல் மாடல்ஸ் திரைப்படத்தின் போஸ்டரை காப்பி செய்து உருவாக்கப்பட்டுள்ளது. சுவரில் உள்ள வாசகம் தவிர்த்து அத்தனையும் அப்படியே இடம்பெற்றுள்ளன. இதனை வைத்தே சபாபதி ஹாலிவுட் படத்தின் காப்பி என்கிறார்கள்.

Also read... அரசின்‌‌ ‌‌தலையீட்டால்‌‌ ‌‌திரையரங்கில்‌‌ ‌‌வெளியாகும்‌‌ ‌‌மோகன்லாலின்‌ ‌மரைக்கார்‌!

ஆனால், ரோல் மாடல்ஸ் திரைப்படத்துக்கும், சபாபதி கதைக்கும் சம்பந்தமில்லை. போஸ்டரை மட்டுமே காப்பியடித்துள்ளனர். போஸ்டரை காப்பியடித்தவர்கள் கதையை மட்டும் சொந்தமாகவா யோசித்திருப்பார்கள் என்று கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. நவம்பர் 19 படம் வெளிவந்ததும் உண்மை தெரிந்துவிடப் போகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: