முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சுந்தர் சி-யின் 'அரண்மனை 4' படத்தில் இணைந்த முன்னணி நடிகைகள்!

சுந்தர் சி-யின் 'அரண்மனை 4' படத்தில் இணைந்த முன்னணி நடிகைகள்!

சுந்தர் சி

சுந்தர் சி

அரண்மனை படத்தின் 4 ஆம் பாகமாக உருவாகும் இதில் ஹைலைட் என்னவென்றால் விஜய் சேதுபதியும் சந்தானமும் முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பேய் பட டிரெண்ட் பீக்கில் இருந்த போது ராகவா லாரன்ஸின் காஞ்சனா சீரிஸ் ஒருபக்கம், சுந்தர்.சியின் அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சுந்தர் சி, ஆண்ட்ரியா, ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் வெளியான அரண்மனை படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் பட்டையை கிளப்பியது. அதன் பிறகு இந்த படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களையும் இயக்கியுள்ளார்.

இதில் அரண்மனை படத்தின் 3வது பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியாகியிருந்தது. சுந்தர்.சியின் காஃபி வித் காதல் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் மீண்டும் அரண்மனை படத்தை கையிலெடுத்திருக்கிறார்.

அரண்மனை படத்தின் 4 ஆம் பாகமாக உருவாகும் இதில் ஹைலைட் என்னவென்றால் விஜய் சேதுபதியும் சந்தானமும் முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அரண்மனை முதல் பாகத்தில் காமெடியனாக நடித்திருந்த சந்தானம் அடுத்து ஹீரோவாகிவிட்டதால் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். சுந்தர்.சி இயக்கத்தில் முதன்முறையாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இதர நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது தமன்னா மற்றும் ராஷி கண்ணா இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sundar C