ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு லேட்டஸ்ட் அப்டேட்... விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

வாரிசு லேட்டஸ்ட் அப்டேட்... விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா குறித்து பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கம் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இரண்டு பாடல்களும் இரண்டு சண்டைக் காட்சிகள் மட்டும் மீதம் இருப்பதாக சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

மேலும், இந்த திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதாகவும் அறிவித்தனர். இந்த நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகள் குறித்து படக்குழுவினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.

அதில் குறிப்பாக வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை நடத்துவது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அந்த விழாவை இரண்டு இடங்களில் நடத்த தயாரிப்பு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

Also read... இந்து மத பிரச்னை.. 400 கோடி.. பொன்னியின் செல்வன் மத சர்ச்சையை வசூலோடு ஒப்பிட்ட பார்த்திபன்!

ஆனால் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஒரு இடத்தில் நடக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay