Home /News /entertainment /

சிவகார்த்திகேயனின் படத்தில் இணைந்த கவுண்டமணி

சிவகார்த்திகேயனின் படத்தில் இணைந்த கவுண்டமணி

சிவகார்த்திகேயன், கவுண்டமணி

சிவகார்த்திகேயன், கவுண்டமணி

'மண்டேலா' பட இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கும் இப்படத்திற்கு 'மாவீரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.

  • News18
  • Last Updated :
    நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டான் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளியாகியது. இதனை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

    'மண்டேலா' பட இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கும் இப்படத்திற்கு 'மாவீரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

    Also read... பிரமாஸ்த்ரா படத்தின் கெசாரியா பாடல் வெளியீடு!

    இந்நிலையில் மாவீரன் படத்தில் நடிகர் கவுண்டமணி நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இந்தப் படத்தில் கவுண்டமணி சிவகார்த்திகேயனின் பெரியப்பாவாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Goundamani, Entertainment, Sivakarthikeyan

    அடுத்த செய்தி