முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தென்பாண்டி சீமையிலே பாடலை வித்தியாசமாக பாடிய ஸ்ருதிஹாசன்!

தென்பாண்டி சீமையிலே பாடலை வித்தியாசமாக பாடிய ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன்

"தென்பாண்டி சீமையிலே பாடல் எனக்கு எப்போதும் பிடிக்கும்"

  • Last Updated :

கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் பாடலான தென் பாண்டி சீமையிலே பாடலை அவரது மகள் ஸ்ருதிஹாசன் பாடி அதை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் இருக்கும்படி மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. திரைப்பட படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் நடிகர்கள் வீட்டிலிருந்தபடியே விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவது, சமையல் வீடியோக்களை வெளியிடுவது என சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தென்பாண்டி சீமையிலே பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் வித்தியாசமாக பாடியுள்ளார். அவரே கீ போர்டு வாசித்தபடி பாடலைப்பாடி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் பாடல் தனக்கு எப்போதும் பிடிக்கும் என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.
 
View this post on Instagram
 

I’ve always loved this song 🖤


A post shared by @ shrutzhaasan onமேலும் பார்க்க: யோகா செய்து உடல்நலனைப் பேணும் திரையுலக பிரபலங்கள்

top videos

    First published:

    Tags: Actress shruti Haasan