ரஜினியுடன் இணைந்த தேங்காய் சீனிவாசனின் பேரன்!

ரஜினியுடன் இணைந்த தேங்காய் சீனிவாசனின் பேரன்!
ரஜினிகாந்துடன் ஆதித்யா
  • News18
  • Last Updated: September 4, 2019, 2:44 PM IST
  • Share this:
தர்பார் படத்தில் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் இணைந்துள்ளார்.

பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அதற்கான புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில் பாலிவுட் பிரபலங்கள் சிலரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் ஆதித்யாவும் இணைந்துள்ளார்.


இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆதித்யா, ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து நடிப்பது தனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாக கூறியுள்ளார். இவர் ஏற்கெனவே ரஜினியுடன் 2.0 மற்றும், பேட்ட படத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.ரஜினிகாந்த் நடித்த பல படங்களில் தேங்காய் சீனிவாசன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது அவருடைய பேரன் நடிக்க வரும்போதும் ரஜினி ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

வீடியோ பார்க்க: ரஜினி காந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...