Thenandal Films Murali: மாரடைப்பால் ’மெர்சல்’ தயாரிப்பாளர் முரளி மருத்துவமனையில் அனுமதி

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி

தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்து, அட்லீ இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான 'மெர்சல்’ படத்தை தயாரித்தார்.

  • Share this:
    தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் தயாரிப்பாளர் முரளி ராமசாமி மாரடைப்பால் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    புகழ்பெற்ற தயாரிப்பாளர் ராம நாராயணனின் மகன் முரளி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு, தனது மனைவி ஹேமா ருக்மணியுடன் சேர்ந்து தங்களின் தயாரிப்பு இல்லத்தை புதுப்பித்து, தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்து, அட்லீ இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான 'மெர்சல்’ படத்தை தயாரித்தார்.

    தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு லேசான மாரடைப்பு தான் என்றும் அதனால் அவர் ஓரிரு நாட்களில் குணமாகி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதையடுத்து அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: