ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

டிவி பேட்டியில் அழ வைத்த கமல்.. ஈழத்தமிழர் வலியை நகைச்சுவையுடன் சொன்ன தெனாலி!

டிவி பேட்டியில் அழ வைத்த கமல்.. ஈழத்தமிழர் வலியை நகைச்சுவையுடன் சொன்ன தெனாலி!

தெனாலி

தெனாலி

நகைச்சுவையுடன் பேச்சை ஆரம்பித்து, ஈழத்தில் போரினால் ஏற்பட்ட இழப்பை கமல் சொல்லும்விதம் ரசிகர்களை கலங்கடித்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தெனாலி 2000 செப்டம்பர் 26 தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்தப் படத்தைப் பற்றி பேசுகையில் மூன்று விஷயங்கள் தவிர்க்க முடியாதவை.தமிழின் மாஸ் நடிகர்களில் கமல் நீங்கலாக அனைவரும் ஜானர் திரைப்படங்களை தவிர்ப்பவர்கள். அதாவது நகைச்சுவை, த்ரில்லர், ட்ராமா என்று தனித்தனி ஜானர்களில் படங்கள் செய்வதில்லை.

காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன், பாடல்கள், ஹீரோயிசம் என அனைத்தும் கலந்த படங்களில் மட்டுமே நமது மாஸ் ஹீரோக்கள் நடிப்பார்கள். அப்படி நடித்தால்; மட்டுமே ஆறிலிருந்து அறுபது வரையான ரசிகர்களை கவர முடியும். நகைச்சுவை, த்ரில்லர், ரொமான்ஸ் என தனி ஜானர் திரைப்படங்களை செய்யும் போது அதனை பார்க்கிற ரசிகர்கள் வட்டம் சுருங்கிப் போகும். அந்த ரிஸ்க்கை கமல் தவிர வேறு எந்த மாஸ் நடிகரும் எடுப்பதில்லை.

தெனாலி படத்தில் பாடல்கள், சென்டிமெண்ட் இருந்தாலும் இதுவொரு நகைச்சுவை திரைப்படம் என்பதே சரி. ஈழத்திலிருந்து தமிழ்நாடு வந்த, எதைப் பார்த்தும் பயப்படுகிற, ஓர் இளைஞனைப் பற்றிய கதை. அந்த அப்பாவி ஒரு மனநல மருத்துவருக்கு தலைவலியாகவும், அவரது குடும்பத்தை கலைக்கும் கோடாலியாகவும் மாறும் நிகழ்வை நகைச்சுவையுடன் பேசிய படம்.

படத்தின் ஒரு காட்சியில், தொலைக்காட்சி பேட்டியின் போது நகைச்சுவையுடன் பேச்சை ஆரம்பித்து, ஈழத்தில் போரினால் ஏற்பட்ட இழப்பை கமல் சொல்லும்விதம் ரசிகர்களை கலங்கடிங்கடிக்கச் செய்தது.

நாம் ஏற்கனவே பலமுறை கூறியது போல் நகைச்சுவையிலேயே பல ரசங்களை செய்பவர் கமல். அவரது ஒரு படத்தின் நகைச்சுவை நடிப்பு மற்றொரு படத்தின் நகைச்சுவை நடிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். தெனாலி படத்தின் நகைச்சுவை நடிப்பு மைக்கேல் மதன காம ராஜன், சதிலீலாவதி, பஞ்ச தந்திரம் என மற்ற கமலின் நகைச்சுவைப் பட நடிப்பிலிருந்து மாறுபட்டது.

தெனாலி குறித்து பேசுகையில் தவிர்க்க முடியாத மூன்றாவது விஷயம் தெனாலி படத்தின் பாடல்கள். இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் அலைபாயுதே, ரிதம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என ரஹ்மான் இசையில் வைரமுத்து முக்கியமான திரைப்பாடல்களை தந்த நேரத்தில், ரஹ்மானின் இசையில் தனது வரிகள் அமுங்கிப் போவதாக பொது மேடையில் ஒரு விமர்சனத்தை முன் வைத்தார்.

Read More: Thalapathy 67: தளபதி 67 படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநர்?

இந்தக் கருத்து கசப்பாகி ரஹ்மான், வைரமுத்து இடையில் விரிசலை உருவாக்கியது. ரஹ்மான் தான் இசையமைக்கும் படங்களில் வைரமுத்துவை தவிர்த்து புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பளித்தார். அந்த நேரத்தில்தான் அழகம் பெருமாள் விஜய், சிம்ரன் நடிப்பில் உதயா படத்தை தொடங்கினார். அதில் வைரமுத்து இல்லை. அறிவுமதி, பழனிபாரதி, கங்கை அமரன், இளைய கம்பன் போன்றோர் அதில் பாடல்கள் எழுதினர். இளைய கம்பன் ரஹ்மான் இசையில் பாடல் எழுதிய முதல் படம் அது.

அதனைத் தொடர்ந்து ரஹ்மான் தெனாலி படத்துக்கு இசையமைத்த போதும் வைரமுத்துவை தவிர்த்தார். இதில் இடம்பெற்ற, ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா... பாடலை கலைக்குமாரும், அத்தினி சித்தினி... பாடலை அறிவுமதியும், இஞ்சேருங்கோ... பாடலை தாமரையும், தெனாலி தெனாலி... பாடலை இளைய கம்பனும், போர்க்களம் எங்கே... பாடலை பிறைசூடனும், சுவாசமே... பாடலை பா.விஜய்யும் எழுதினர். இளையராஜாவின் புறக்கணிப்புக்குப் பிறகு வைரமுத்துக்கு கிடைத்த கொழுக்கொம்பு ரஹ்மான். அவரை இழந்தால் வனவாசம்தான் என்பதை உணர்ந்த வைரமுத்து, பூ வீசி விளையாடியவர்களை வாள் வீசி விளையாடியதாக சொல்லி பிரித்துவிட்டார்கள் என உருக்கமாக பேட்டி தந்து, மீண்டும் ரஹ்மானுடன் ராசியானார்.

அப்படி ரஹ்மான் - வைரமுத்து ஊடலின் நடுவில் பிறந்த ஒன்றிரண்டு படங்களில் தெனாலியும் ஒன்று. வைரமுத்து ரஹ்மானுடன் இணைய பல காரணங்கள் இருந்தன. ரஹ்மான் வைரமுத்துடன் இணைய ஒரேயொரு காரணமே இருந்தது. வைரமுத்துக்கு பதில் அவர் பயன்படுத்திய எந்த பாடலாசிரியரும் ரஹ்மானுக்கு முழுத்திருப்தியை தரவில்லை. இளைய கம்பன் போன்றவர்கள் வைரமுத்துவின் இடத்தை தங்களின் கவித்துவத்தால் நிரப்பியிருந்தால் கதையே வேறு மாதிரி ஆகியிருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.

Read more: சென்னை விமான நிலையத்தில் அஜித்... வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

 தெனாலி திரைக்கு வந்து 175 நாள்கள் ஓடி வெற்றியை பதிவு செய்தது. அப்படம் வெளியாகி நேற்றுடன் 22 வருடங்கள் நிறைவடைந்து இன்று 23 வது வருடம் தொடங்குகிறது.

Published by:Srilekha A
First published:

Tags: Kamal Haasan, Kollywood, Tamil Cinema