ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லஜ்ஜாவதியே இசை.. ரீல்ஸில் வைரலாகும் தெம்மா தெம்மா பாடல்.. திடீர் வைரலுக்கு என்ன காரணம்?

லஜ்ஜாவதியே இசை.. ரீல்ஸில் வைரலாகும் தெம்மா தெம்மா பாடல்.. திடீர் வைரலுக்கு என்ன காரணம்?

தெம்மா தெம்மா

தெம்மா தெம்மா

Themma Themma Themmadikatte Malayalam Full Video Song | 2004ல் வெளியான ‘ரெயின் ரெயின் கம் அகெயின்’ எனும் மலையாள சினிமாவில் வரும் ‘தெம்மா தெம்மா’ பாடல் வைரலாகி வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2004ல் வெளியான ‘ரெயின் ரெயின் கம் அகெயின்’ எனும் மலையாள சினிமாவில் வரும் ‘தெம்மா தெம்மா’ பாடல் வைரலாகி வருகிறது.

தெம்மா தெம்மா என்ற மலையாள பாடல் சமீபத்தில் ரீல்ஸில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்கள் ஒரு முறையாவது இந்த பாடலின் ரீல்ஸை பார்த்திருக்க வாய்புகள் உண்டு. இந்த ரீல்ஸில் வரும் தெம்மா தெம்மா தெம்மாடிகாட்டே பாடல் 2004 மலையாளத்தில் வெளியான ரெயின் ரெயின் கம் அகெயின் படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த பாடலை ஜெய்சி கிஃப்ட் இசையமைத்துள்ளார். இந்த மாதிரி பல ஹிட் பாடல்களும் இவரது இசையில் வெளியாகியுள்ளது. 4 ஸ்டூடண்ஸ் என்ற தமிழ் படத்தில் ஜெய்சி கிஃப்ட் இசையில் லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே, அன்னக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக்க என்ற பாடல்கள் அனைத்துமே 90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களாகவே தற்போதுவரை உள்ளது.

இந்நிலையில் இந்த தெம்மா தெம்மா தெம்மாடிகாட்டே பாடலுக்கு ஹாஸ்டல் கேர்ள்ஸ் நடனமாடும் வீடியோ தான் ரீல்ஸில் முதலில் வைரலானது. அதன் பிறகு பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் பன்ன தொடங்கினர்.

Also read... வெள்ளை நிற கவுனில் ஹாட் ஃபோட்டோஸ் வெளியிட்ட நடிகை பூமி பெட்னேகர்!

இதனை இளைஞர்கள் ட்ரோல் செய்தும் மீம் போட்டும் வீடியோ வெளியிட இன்னும் அதிகமாக இந்த பாடல் வைரலானது. இந்த பாடலுக்கு இளைஞர்களின் நடனம் பெரிதும் பேசுபொருளாக மாறியது. என்ன டான்ஸ் இது இப்படிலாமா ஆடுவாங்க என்று பலரும் கமெண்ட் செய்தும் வருகின்றனர். கேரளாவில் ஆரம்பித்து தற்போது இந்தியா முழுவதும் இந்தப் பாடலின் ரீல்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

இதனை கேள்விபட்ட இசையமைப்பாளர் ஜெஸ்சி கிஃப்ட்டும் தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Viral Video