Home /News /entertainment /

லெஸ்பியன் படத்தை திரையிட திரையரங்குள் மறுப்பு - கடுங்கோபத்தில் இயக்குனர்

லெஸ்பியன் படத்தை திரையிட திரையரங்குள் மறுப்பு - கடுங்கோபத்தில் இயக்குனர்

ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா

இன்றைய தலைமுறை வித்தியாசம் என்ற பெயரில் முயன்றுப் பார்க்கும் அனைத்துப் புதிய விஷயங்களையும் பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்பே படமாக எடுத்தவர் ராம் கோபால் வர்மா.

இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர் என விளம்பரப்படுத்தப்பட்ட திரைப்படத்தை திரையிட பல திரையரங்குகள் தயங்கியதால் அதன் வெளியீடு தள்ளிப் போயுள்ளது.

சத்யா, சர்க்கார், சர்க்கார் ராஜ், கம்பெனி போன்ற படங்களை இயக்கி இந்திப் படவுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் ராம் கோபால் வர்மா. இன்றைய தலைமுறை வித்தியாசம் என்ற பெயரில் முயன்றுப் பார்க்கும் அனைத்துப் புதிய விஷயங்களையும் பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்பே படமாக எடுத்தவர். ஒருகட்டத்தில், இதற்கு மேல் சொல்லவும், எடுக்கவும் என்ன இருக்கிறது என்று தீர்மானித்துவிட்டது போல், மனதில் தோன்றியதையெல்லாம் படமாக எடுக்க ஆரம்பித்தார். அப்படி அவர் எடுத்திருக்கும் புதிய படம்தான் இந்த லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர்.

சூர்யாவின் உள்ளம் உருகுதைய்யா பாடல் வீடியோ

Theatrical refusal to screen Ram Gopal Varma's lesbian film, ram gopal varma, ram gopal varma wife, ram gopal varma movies 2020, ram gopal varma net worth, ram gopal varma ki aag, ram gopal varma twitter, ram gopal varma website, ram gopal varma horror movies, ram gopal varma daughter, ராம் கோபால் வர்மா Theatrical refusal to screen Ram Gopal Varma's lesbian film, ram gopal varma, ram gopal varma wife, ram gopal varma movies 2020, ram gopal varma net worth, ram gopal varma ki aag, ram gopal varma twitter, ram gopal varma website, ram gopal varma horror movies, ram gopal varma daughter, ராம் கோபால் வர்மா

இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் இந்தப் படம் ஏப்ரல் 8 நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. நைனா கங்குலி, அப்ஸரா ராணி என்ற இரு பேரழிககள் லெஸ்பியனாக இதில் நடித்துள்ளனர். அவர்கள் இருவரையும் பக்கத்துக்கு ஒருவராக நிற்க வைத்து மூன்று மொழிகளிலும் புரமோஷனை முடுக்கிவிட்டார் வர்மா. சென்னை, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு என முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். பெங்களூருவில் உள்ள புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Theatrical refusal to screen Ram Gopal Varma's lesbian film, ram gopal varma, ram gopal varma wife, ram gopal varma movies 2020, ram gopal varma net worth, ram gopal varma ki aag, ram gopal varma twitter, ram gopal varma website, ram gopal varma horror movies, ram gopal varma daughter, ராம் கோபால் வர்மா

ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்... விழாவை சிறப்பித்த 80'ஸ் பிரபலங்கள்!

என்ன செய்தும், படத்தை திரையிட எதிர்பார்த்த எண்ணிக்கையிலான திரையரங்குகள் முன்வரவில்லை. இதனால், படவெளியீட்டை தள்ளி வைப்பதாக கோபத்துடன் அறிவித்துள்ளார் வர்மா. சும்மாவே சலங்கைக்கட்டி ஆடுவார். இப்போது கோபத்தை கிளறி விட்டிருக்கிறார்கள். என்ன செய்யப் போகிறாரோ.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

அடுத்த செய்தி