Home /News /entertainment /

எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடக் கூடாது - திரையரங்குகளுக்கு பாமக எச்சரிக்கை

எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடக் கூடாது - திரையரங்குகளுக்கு பாமக எச்சரிக்கை

சூர்யா

சூர்யா

பாபா படம் வெளிவந்த போது பாமக ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் படத்தை திரையிட விடாமல் பாமகவினர் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவங்கள் நிகழ்ந்தன.

சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை கடலூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிட கூடாது என பாமக சார்பிலும், வன்னியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்து நடித்திருந்த ஜெய்பீம் திரைப்படத்தில் காவல் உதவி ஆய்வாளர் வன்னியர் ஆக சித்தரிக்கப்பட்டு இருந்தார். அதற்கு பாமக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை வன்னியராக காட்டும் அக்கினி குண்ட காலண்டர் படத்திலிருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை கடலூர் மாவட்டத்தில் உள்ள எந்த திரையரங்கிலும் வெளியிடக் கூடாது என பாமக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை கடிதம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் விஜயவர்மன் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா தேதி இதுதான்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

மிகுதியான வாக்கிய பிழைகளுடன் எழுதப்பட்டிருக்கும் அக்கடிதத்தில், சூர்யா வன்னியர்களிடம் பொது மன்னிப்பு கேட்கும்வரை அவரது படத்தை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Theatres should not screen Suriya Etharkum Thunindhavan film - PMK warning to theaters, Suriya Etharkkum Thunindhavan, pmk website, pmk full form, pmk tamil, pmk history in tamil, pmk photos, pmk symbol, pmk tamil nadu, etharkkum thunindhavan, etharkum thuninthavan teaser, suriya, suriya 39th movie, suriya 40 release date, etharkum thuninthavan 2021 director, etharkum thuninthavan release date, எதற்கும் துணிந்தவன் டீசர், எதற்கும் துணிந்தவன் டீசர் ரிலீஸ், surya 40 first look, etharkum thuninthavan 2021 actress, etharkum thuninthavan third look, suriya 40 music director, suriya 40 cast, etharkkum thunindhavan release date, suriya height, suriya wife, suriya age, suriya 39th movie, suriya cast, suriya twitter, suriya brother, suriya imdb, சூர்யா, எதற்கும் துணிந்தவன், சூர்யா எதற்கும் துணிந்தவன், எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி, சன் பிக்சர்ஸ்

தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு... செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!

பாபா படம் வெளிவந்த போது பாமக ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் படத்தை திரையிட விடாமல் பாமகவினர் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவங்கள் நிகழ்ந்தன. அதுபோன்ற அசம்பாவிதங்கள் எதற்கும் துணிந்தவன் படத்துக்கும் நேருமோ என்ற அச்சத்தை இந்தக் கடிதம் ஏற்படுத்தியுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Suriya

அடுத்த செய்தி