ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீபாவளி ரேஸில் 'சர்தார்'.. 'பிரின்ஸ்'! அதிகாலை ஷோவுக்கு ப்ளான்! அரசுக்கு பறந்த கோரிக்கை

தீபாவளி ரேஸில் 'சர்தார்'.. 'பிரின்ஸ்'! அதிகாலை ஷோவுக்கு ப்ளான்! அரசுக்கு பறந்த கோரிக்கை

பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வம்

தீபாவளி திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வேண்டும் தமிழக அரசுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை. 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு  கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.  இந்தப் படங்களுக்கான புரமோஷன் நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அத்துடன் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் கடைசி இரண்டு திரைப்படங்களும் தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல இடங்களில் வெற்றி அடைந்தன.

இதனால் அவர்கள் நடித்துள்ள சர்தார் மற்றும் பிரின்ஸ் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் காரணமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 21ஆம் தேதியே வெளியாகின்றன பிரின்ஸ் மற்றும் சர்தார் படங்கள்.

Also read... விக்கி - நயன் தம்பதியை வாழ்த்தி கடிதம் அனுப்பிய கார்த்தி!

அந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சிகளாக காலை 4 மணிக்கு திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். மேலும் தங்களுக்கு வழக்கம்போல் அனுமதி கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi, Sivakarthikeyan, Theatre