பீஸ்ட் திரைப்படம் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியான நிலையில், அந்த திரையரங்குகளை தற்போது கேஜிஎப் திரைப்படம் கைப்பற்ற தொடங்கியுள்ளது.
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம், ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்கிற்கு ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்தத் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியதால் தமிழகத்தில் உள்ள 800 திரையரங்குகள் இந்த திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் யஷ் நடிப்பில் உருவான கன்னட திரைப்படமான
கேஜிஎப் பீஸ்ட் திரைப்படம் வெளியாகிய அடுத்த நாளான, ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவிய போதும், 250 திரையரங்குகள் வரை மட்டுமே ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டது. ஆனால் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்க்கப்பட்டதை விட மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையில், முதல் நாளிலேயே கேஜிஎப் திரைப்படத்திற்கு ஏறத்தாழ 100 திரையரங்குகள் உயர்த்தி 350 திரையரங்குகள் வழங்கப்பட்டது.
கேஜிஎப் திரைப்படம் முதல் நாளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, இந்த திரைப்படத்திற்கான காட்சிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டது. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள சிறிய நகரங்களிலும்
கேஜிஎப் 2 திரைப்படத்திற்கான காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை தினம் என்பதால் பீஸ்ட் திரைப்படத்திற்காக திட்டமிட்ட சிறப்பு காட்சிகளையும், தற்போது கேஜிஎப் திரைப்படத்திற்காக மாற்றி திரையரங்குகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
பிரபல டான்ஸ் மாஸ்டரின் குழந்தைகளுடன் அட்டகாசமாக நடனமாடிய விஜய்!
இதன் உச்சமாக சேலம் ஏ ஆர் ஆர் எஸ் திரையரங்கில் கேஜிஎப் திரைப்படத்திற்கு டிக்கெட் எடுக்கச் செல்லும் ரசிகர்களிடம், பீஸ்ட் திரைப்படத்திற்கு மட்டுமே டிக்கெட் உள்ளது என திரையரங்க பணியாளர்கள் கூற, எனக்கு வேண்டாம் என ரசிகர்கள் விரும்பும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியானது.
பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தை காண்பதை காட்டிலும் கேஜிஎப் திரைப்படத்திற்கு அதிக ஆர்வம் காட்டுவதால் தற்போது பீஸ்ட்டுக்கு நிகராக திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் வசூல் சக்ரவர்த்தியாக கொண்டாடப்பட்ட விஜய்யின் சாம்ராஜ்யத்தை, தற்போது கன்னட நடிகரான யஷ் அசைத்து பார்த்திருக்கிறார் என்பது, அதிகரிக்கும் கேஜிஎப் திரையரங்குகளின் எண்ணிக்கை மூலம் உறுதியாகியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.