ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Nayanthara: நயன்தாராவின் கனெக்ட் படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுப்பு

Nayanthara: நயன்தாராவின் கனெக்ட் படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுப்பு

கனெக்ட்

கனெக்ட்

வியாபாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்பதால், நயன்தாராவின் கனெக்ட் படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நயன்தாரா நடிப்பில், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கனெக்ட்'. சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ள இப்படம், வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 99 நிமிடங்கள் ஓடும் இப்படத்துக்கு இடைவெளி இல்லை என அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

தற்போது இது படம் வெளியாவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக படங்களின் இடைவெளியின் போது மக்கள் தியேட்டரில் உள்ள கேண்டீன்களில் திண்பண்டங்கள் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இது திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது. இந்நிலையில் இடைவெளி இல்லை என்றால் அவர்களின் வியாபாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்பதால், நயன்தாராவின் கனெக்ட் படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமந்தா, சாய் பல்லவி, இப்போது தீபிகா படுகோன்... ரம்யா ஸ்பந்தனா காட்டம்!

இதையடுத்து படக்குழுவினர் பரிசீலித்து கனெக்ட் படத்துக்கு இடைவெளி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Nayanthara