ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூரரைப்போற்று படத்தை வெளியிட மாட்டோம் - தொடங்கியது திரையரங்கு, ஓடிடி போர்!

சூரரைப்போற்று படத்தை வெளியிட மாட்டோம் - தொடங்கியது திரையரங்கு, ஓடிடி போர்!

சூர்யா

சூர்யா

ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 4 வாரங்கள் கழிந்த பிறகே ஓடிடி வெளியீட்டுக்கு தர வேண்டும் என்ற தீர்மானத்தையும் திரையரங்கு உரிமையாளர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஓடிடி தளங்கள் விலைவாசிப்போல நாளுக்குநாள் ஊதிப்பெருத்தன. முன்னணி நடிகர்களின் படங்களே ஓடிடியில் வெளியாகி திரையரங்குகளை திகைக்க வைத்தன. நிலைமை சீரானாலும் ரசிகர்கள் திரையரங்குக்கு வருவார்களா என்ற சந்தேகம் துளிர்த்தது. அதற்கேற்ப, திரையில் வெளியான பெல்பாட்டம் திரைப்படம் சொற்ப வசூலையே பெற்றது. 

அதேநேரம் மாஸ் நடிகர்களின் படங்கள் திரையரங்குகளை மட்டுமே குறிவைக்கின்றன. வரும் வாரம் லாபம், தலைவி போன்ற முக்கியமான திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையான தீர்மானம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். ஓடிடியில் வெளியான திரைப்படங்களை ஒருபோதும் திரையரங்கில் வெளியிடுவதில்லை என்பதுதான் அந்த தீர்மானம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓடிடியில் நேரடியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட சூர்யா முயன்று வந்தார். இந்த அறிவிப்பினால் சூரரைப்போற்று படம் திரையரங்கில் வெளியாவது கேள்விக்குறியாகியுள்ளது.

Also read... அட்லி, ஷாருக்கான் இணையும் படத்தின் பெயர் வெளியாகியுள்ளது...!

அத்துடன், ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 4 வாரங்கள் கழிந்த பிறகே ஓடிடி வெளியீட்டுக்கு தர வேண்டும் என்ற தீர்மானத்தையும் திரையரங்கு உரிமையாளர்கள் நிறைவேற்றியுள்ளனர். அதற்கு ஒத்துக் கொள்ளும் திரைப்படங்களை மட்டுமே திரையரங்கில் திரையிடுவோம் எனவும் அறிவித்துள்ளனர்.

First published:

Tags: OTT Release, Soorarai Pottru, Theatre