என்னது தியேட்டர்ல போன் நம்பர் கேக்குறாங்களா? எரிச்சலடையும் ரசிகர்கள்

தியேட்டர்

திரையரங்குகளில் படம்  பார்க்க வரும் மக்களிடம் போன் நம்பர் கேட்கப்படுவதால் ரசிகர்கள் எரிச்சலடைகிறார்கள் என்று திரையரங்க ‌நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா காரணமாக திரையரங்குகள் பல கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான கட்டுப்பாடு திரையரங்கிற்கு வரும் அனைவரிடமும் தொலைபேசி எண்ணை வாங்கி பதிவு செய்ய வேண்டும் என்பதே. படம் பார்க்க வரும் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அருகில் இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல மக்கள் திரையரங்குகளுக்கு ரகசியமாக வருவதால் தொலைபேசி எண் வாங்கும் பழக்கம் அவர்களை பதட்டமடைய செய்கிறது.

இன்றைக்கு சென்னையில் ஒரு திரையரங்கில் முதியவர் ஒருவர் இரண்டாம் குத்து திரைப்படம் பார்க்க வந்திருந்தார். டிக்கெட் கவுண்டரில் அவரிடம் தொலைபேசி எண் கேட்கப்பட்டபோது அதனை கொடுக்க முடியாது என வாக்குவாதம் செய்தார்.

Also read... Biggboss 4 Tamil | 'ரியோவிற்கு அடிப்படை மரியாதை கூட தெரியவில்லை' - டான்சர் சதீஷ் விமர்சனம்..பின்னர் திரையரங்க நிர்வாகிகள் அவருடைய எண் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அதற்காகத்தான் இந்த எண் கேட்கப்படுகிறது என்றும் விளக்கமளித்த பின் தனது தொலைபேசி எண்ணை பதிவு செய்து விட்டு படம் பார்க்கச் சென்றார். இன்னும் பல காதலர்களுக்கும் இந்த வழக்கம் பிரச்சினையை தருவதாக திரையரங்க நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published: