பிரபுதேவா நடிப்பில் ஹரிகுமார் இயக்கத்தில் இந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் தேள். இது கொரிய திரைப்படம் ஒன்றின் அனுமதி பெறாத தழுவல் என்பதால் தயாரிப்பாளர் பெருந்தொகை நஷ்ட ஈடாக அளித்துள்ளார்.
ஹரிகுமார் அடிப்படையில் ஒரு நடன இயக்குனர். பல படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். அவர் பிரபுதேவாவை வைத்து இயக்கிய திரைப்படம் தான் தேள். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரித்திருந்தார். படம் முடிவடைந்த நிலையில்தான் கொரியாவில் வெளியான Pieta' என்ற திரைப்படத்தின் தழுவல் தேள் என்பது தயாரிப்பு தரப்புக்கு தெரிய. வந்ததுள்ளது. உலக அளவில் பிரபலமான கிம் கி தக் இயக்கிய திரைப்படம் இது.
Pieta' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பாலிவுட்டின் பிரபல நிறுவனம் முறைப்படி உரிமையை வாங்கியிருந்தது.தேள் திரைப்படம் தாங்கள் உரிமை வாங்கி வைத்திருக்கும் கொரிய திரைப்படத்தின் தழுவல் என்பதை அறிந்தவர்கள் நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து திரைப்படத்தின் காட்சிகளை கொரிய படத்தின் சாயல் இல்லாமல் மாற்ற முயற்சி செய்துள்ளனர். ஏற்கனவே படம் முழுமையாக எடுக்கப்பட்டிருந்ததால் அது சாத்தியமில்லாமல் போக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு கோடிக்கும் அதிகமான தொகையை நஷ்ட ஈடாக அளித்துள்ளனர்.
Also read... பறவைகளுக்கு பரிந்து பேசிய நடிகைக்கு அபராத தொகையை குறைத்த உயர்நீதிமன்றம்
தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத நஷ்டம் காரணமாக பிரபுதேவா தனது சம்பளத்தில் பெருமளவு விட்டுக் கொடுத்ததாக உள்வட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தேள் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் சம்யுக்தா ஹெக்டே, ஈஸ்வரி ராவ், யோகிபாபு, உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சி.சத்யா இசையமைத்திருந்தார். இந்த பொங்கலுக்கு வெளியான தேள் திரையரங்கில் ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை . அதேநேரம் தயாரிப்பாளருக்கு தழுவல் என்ற வகையில் பெரும் தொகையை நஷ்ட ஈடாக தர வைத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Prabhu deva