• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜெர்மனியில் திறக்கப்படும் உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரை!

ஜெர்மனியில் திறக்கப்படும் உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் திரை!

ஐமேக்ஸ்

ஐமேக்ஸ்

இந்த ஐமேக்ஸ் திரையரங்கில் முதல் படமாக ஜேம்ஸ்பாண்டின் நோ டைம் டூ டை திரைப்படத்தை திரையிட உள்ளனர்.

  • Share this:
    ஜெர்மனியின் லியோன்பெர்க் நகரில் உலகின் மிகப்பிரமாண்டமான ஐமேக்ஸ் திரை திறக்கப்பட உள்ளது.

    சினிமா திரை அனுபவத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்ற நவீன தொழில்நுட்பம் ஐமேக்ஸ். 35 எம்எம் மில் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அறிவியலும், தொழில்நுட்பமும் சினிமாஸ்கோப், 70 எம்எம் என அகன்ற திரை அனுபவத்தை பரிசளித்தன. அதன் அடுத்தக்கட்டமே ஐமேக்ஸ். சாதாரண 70 எம்எம் திரையைவிட ஐமேக்ஸ் திரை பல மடங்கு பெரியது. தமிழகத்தில் சென்னை பீனிக்ஸ் மாலில் ஐமேக்ஸ் திரையரங்கு உள்ளது. ஆனால், இது அளவில் சிறியது.

    உலக அளவில் மிகப்பிரமாண்டமான ஐமேக்ஸ் திரையை ஜெர்மனியில் உருவாக்கியிருக்கிறார்கள். ஜெர்மனியின் லியோன்பெர்க்கில் உள்ள Traumaplast மல்டிபிளக்ஸில் இந்தத் திரை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 70 அடி, நீளம் 125 அடிகள். உலகில் இன்றைய தேதியில் இதுவே பிரமாண்டமான ஐமேக்ஸ் திரையாகும்.

    இந்த ஐமேக்ஸ் திரையரங்கில் முதல் படமாக ஜேம்ஸ்பாண்டின் நோ டைம் டூ டை திரைப்படத்தை திரையிட உள்ளனர். இதுபோன்ற அகன்ற திரையனுபவம், ஓடிடி தளங்களின் தாக்கத்திலிருந்து பார்வையாளர்களை மீட்டு திரையரங்குகளுக்கு வரவழைக்கும். ஒரே பிரச்சனை, கட்டணம். சாதாரண திரையரங்கில் வசூலிப்பதைவிட மூன்று நான்கு மடங்கு அதிகமாக ஐமேக்ஸ் திரையரங்குகளில் வசூலிக்கிறார்கள். எனினும் எதிர்கால திரையனுபவம் என்பது ஐமேக்ஸே, அது தவிர்க்க முடியாதது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: