மாமன்னன் திரைப்படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தொடங்கின
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை தொடர்ந்து மாமன்னன் படத்தில் நடித்துள்ளார் உதயநிதி. இந்த திரைப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மாமன்னன் படத்திற்கான பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
இதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உள்ள புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களைப் போல இந்த மாமன்னன் திரைப்படமும் ஒரு முக்கிய விஷயத்தை பேச உள்ளது என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினை தவிர, கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
My most awaited days have finally come to light! Mamannan has made this happen!
Joining hands with the Isai Puyal @arrahman sir himself!
Thanku @Udhaystalin sir @RedGiantMovies_ #mamannan 2023 pic.twitter.com/D98NRP1L6l
— Mari Selvaraj (@mari_selvaraj) October 22, 2022
இதற்கிடையே ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு, நடிகர் கலையரசனை வைத்து, பிரபல OTT தளம் தயாரிக்கும் வெப் தொடரை இயக்கவிருக்கிறாராம் மாரி செல்வராஜ். இதில் நடிகர் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த டிஜிட்டல் தொடருக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Read More: எதிர்பார்ப்பை எகிரவைக்கும் விக்ரம் 61 படத்தின் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ நாளை வெளியாகிறது...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AR Rahman, Mari selvaraj, Tamil Cinema