• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிரகாஷ்ராஜால் தடைபட்ட கார்த்தியின் விருமன்...?

பிரகாஷ்ராஜால் தடைபட்ட கார்த்தியின் விருமன்...?

பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ்

விருமனின் தொடக்கவிழா செப்டம்பர் 6 ஆம் தேதி நடந்தது. செப்டம்பர் 18 ஆம் தேதி முத்தையா படப்பிடிப்பை தேனியில் தொடங்கினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகர் பிரகாஷ்ராஜின் கால்ஷீட் பிரச்சனையால், திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்காமல் விருமன் படக்குழு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொம்பன் வெற்றிப் படத்துக்குப் பிறகு இயக்குனர் முத்தையாவுடன் கார்த்தி இணையும் படம் விருமன். இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி இதில் நாயகியாக அறிமுகமாகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை. எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு. ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரிக்கிறது

விருமனின் தொடக்கவிழா செப்டம்பர் 6 ஆம் தேதி நடந்தது. செப்டம்பர் 18 ஆம் தேதி முத்தையா படப்பிடிப்பை தேனியில் தொடங்கினார். மிகநீண்ட ஷெட்யூல்டாக இது திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களிலேயே பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக பிரகாஷ்ராஜ் கொடுத்த கால்ஷீட்டின்படி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லையென கூறப்படுகிறது. இதனால். படக்குழு சென்னை திரும்பியுள்ளது

Also read... Safe - விறுவிறுப்பான ரோலர் கோஸ்டர் அனுபவம்...!

ஹரியின் யானை படத்தில் அருண் விஜய்யின் அண்ணனாக பிரகாஷ்ராஜ் நடிப்பதாக இருந்தது. படப்பிடிப்பில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போக, அவரை மாற்றிவிட்டு சமுத்திரகனியை நடிக்க வைத்தார் ஹரி. இப்போது விருமனும் பிரகாஷ்ராஜால் தடைபட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: