• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மனைவியின் பெயரை பச்சைக்குத்திக் கொண்ட சினேகன்!

மனைவியின் பெயரை பச்சைக்குத்திக் கொண்ட சினேகன்!

கன்னிகா ரவி மற்றும் ஸ்னேகன்

கன்னிகா ரவி மற்றும் ஸ்னேகன்

நடிகை கன்னிகா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கவிஞர் சினேகன் தனது மனைவியின் பெயரை பச்சைக்குத்திக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களின் வைரலாகி வருகின்றது.

    சினிமா பாடலாசிரியரான சினேகன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துக்கொண்டுள்ளார். இதுவரை 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் மிகவும் பிரபலமானார். அதையடுத்து கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இணைந்தார். தற்போது  இளைஞரணி மாநிலச் செயலாளராகவும் உள்ளார் சினேகன்.

    Snehan Shooting Spot Stills with Wife Kannika Ravi

    சமீபத்தில் சினேகனுக்கும், நடிகை கன்னிகாவிற்கும்  கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றது. அந்த திருமணத்தில் பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Also read... மகனுடன் ருத்ர தாண்டவம் படத்தை பார்த்த ஷாலினி அஜித் - இயக்குநர் வெளியிட்ட போட்டோ!




    இந்நிலையில் நடிகை கன்னிகா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், சினேகன் மனைவி கன்னிகாவின் பெயரை தனது கையில் பச்சைக்குத்திக் கொள்கிறார். வீடியோவை பகிர்ந்த கன்னிகா ரவி அவரது காதலையும் வெளிப்படுத்தியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: