சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் கடந்த மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ் லீ, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில், மே 11-ம் தேதி 'சன் நெக்ஸ்ட்' 'நெட்ஃபிளிக்ஸ்' ஓடிடி தளத்தில் வெளியானது. இதையடுத்து பலரும் இந்தப் படத்தை பார்த்து தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
Also read... கடல் கன்னி உடையில் மின்னும் நடிகை சன்னி லியோன் - லேட்டஸ்ட் கிளிக்ஸ்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் 'அரபிக் குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’, என பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகங்கள். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ‘அரபிக் குத்து’ பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.
View this post on Instagram
தற்போது பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலுக்கு, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிராவோ நடனமாடும் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இப்பாடலுக்கு, கிரிக்கெட் வீரர்கள் உட்பட திரைநட்சத்திரங்கள் நடனமாடி, அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Beast, Bravo