• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எனக்கு பிடிச்ச ஹீரோ இவர்தான்... வைரலாகும் விஷாலின் வீடியோ!

எனக்கு பிடிச்ச ஹீரோ இவர்தான்... வைரலாகும் விஷாலின் வீடியோ!

விஷால்

விஷால்

நேற்று தீபாவளியை முன்னிட்டு விஷாலின் எனிமி படம் திரையரங்குகளில் வெளியானது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகர் விஷால் தனக்கு பிடித்த நடிகர் விஜய் தான் என்று கூறியுள்ள நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

    ’அவன் இவன்’ படத்துக்குப் பிறகு விஷால், ஆர்யா இணைந்து நடித்த படம், எனிமி. மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வினோத் குமார் படத்தை தயாரித்துள்ளார். அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களின் இயக்குனர் ஆனந்த் சங்கர் எனிமியை எழுதி இயக்கியுள்ளார்.

    எனிமியில் விஷால், ஆர்யாவுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

    ஆர்.டிராஜசேகர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.



    இந்நிலையில் நடிகர் விஷால், இப்படத்தின் முதல் நாள் முதல் ஷோவின் போது, ரசிகர்களை திரையரங்குகளுக்கு சென்று சந்தித்துள்ளார். அப்போது, தான் நடிகர் விஜய்யின் ரசிகர் என்பதனை வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: