Home /News /entertainment /

பராசக்தி பூசாரியின் அறியப்படாத மறுபக்கம்!

பராசக்தி பூசாரியின் அறியப்படாத மறுபக்கம்!

பராசக்தி

பராசக்தி

ஓ ரசிக்கும் சீமானே..., சிற்பி செதுக்காத பொற்சிலையே... தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு... புதுப்பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே... போன்ற புகழ்பெற்ற பாடல்களை காமாட்சி எழுதினார்.

1952-ல் வெளிவந்த பராசக்தி திரைப்படம் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டது. சிவாஜி கணேசன் அறிமுகமான அந்தப் படத்துக்கு கலைஞர் எழுதிய அனல்பறக்கும் வசனங்கள் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது. அந்தப் படத்தில் காமாந்தக பூசாரியாக நடித்தவர் கே.பி.காமாட்சி சுந்தரம். பராசக்தியின் மிகப்பெரிய வெற்றியும், சிவாஜி என்ற மகத்தான நடிகனின் வருகையும், கலைஞரின் கனிசுவை வசனங்களும் மறக்கடித்த பல வியப்புகளில் ஒருவர் கே.பி.காமாட்சி சுந்தரம்.

கே.பி.காமாட்சி என்று அறியப்படும் கே.பி.காமாட்சி சுந்தரம் பல்துறை வித்தகர். ஏழு வயதிலேயே நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தவர் தனது 22 வயதிற்குள் ஆயிரம் மேடை நாடகங்களில் நடித்து சாதனை படைத்தார். வில்லன் நடிப்பில் முத்திரைப் பதித்தவர். கே.பி.காமாட்சியின் உறவுக்காரரான கதாசிரியர் கலைஞானம் காமாட்சி குறித்து தனது புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். அதில் ஒரு சம்பவத்தை அவர் குறிப்பிடுகிறார்.

பிரபல நடிகர் எம்.கே.ராதாவின் (எம்.ஆர்.ராதா அல்ல) தந்தை எம்.கந்தசாமி முதலியார் நாடக உலகின் ஜாம்பவான். அவரது நாடகங்களில் 18 வயது நிரம்பிய இளைஞன் நாயகனாக நடித்து வந்தான். நடிப்பு, பாடல், வாத்தியங்கள் இசைப்பது என அந்த இளைஞன் சகலகலாவல்லவனாக திகழ்ந்தான். அவனுக்காகவே நாடகம் பார்க்க மக்கள் அரங்கிற்கு கூடுவார்கள். அப்படி நாடகம் போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு இளைஞனும், ஒல்லியாக அவனைவிட வயதில் குறைந்த ஒரு சிறுவனும் நாடக கம்பெனியில் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள். கந்தசாமி முதலியார் அந்த இளைஞனிடம், நீ வேணும்னா சேர்ந்துக்க, இந்தப்பையன் வளர்ந்தப்புறம் சேர்த்துக்கலாம் என்கிறார்.

parasakthi dialogue in tamil pdf, parasakthi songs, parasakthi video songs download masstamilan, kalaignar parasakthi vasanam in tamil, parasakthi tamilyogi, parasakthi dialogue in english, parasakthi tamil movie download tamilrockers, parasakthi movie dialogue download, kp kamatchi sundaram, kp kamatchi sundaram movies, kp kamatchi sundaram lyrics, பராசக்தி, பராசக்தி படம், பராசக்தி வசனம், பராசக்தி பூசாரி

அந்த இளைஞனோ, எங்க அம்மா இரண்டு பேரும் ஒரே இடத்துலதான் இருக்கணும்னு சொல்லியிருக்காங்க என்று திரும்பிப் போயிருக்கிறார்கள். அவர்களின் நிலையைக் கண்ட காவலாளி, இந்த நாடகத்தோட ஹீரோ குளிக்கப் போயிருக்காரு. அவர் சொன்னா முதலாளி தட்ட மாட்டாரு. எதுக்கும் நீங்க காத்திருந்து ஹீரோவைப் பார்த்திட்டுப் போங்க என்றிருக்கிறார். அவர்களும் காத்திருந்திருக்கிறார்கள். சற்று நேரத்தில் அந்த 18 வயது ஹீரோ குளித்துவிட்டு வந்திருக்கிறார். விஷயத்தை அவரிடம் கூறியதும், கந்தசாமி முதலியாரிடம், இந்த இரண்டு பேரும் இருக்கட்டுமே என்றிருக்கிறார். ஹீரோ சொன்ன பிறகு மறுப்பேது. அவரும் அந்த இருவரையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

parasakthi dialogue in tamil pdf, parasakthi songs, parasakthi video songs download masstamilan, kalaignar parasakthi vasanam in tamil, parasakthi tamilyogi, parasakthi dialogue in english, parasakthi tamil movie download tamilrockers, parasakthi movie dialogue download, kp kamatchi sundaram, kp kamatchi sundaram movies, kp kamatchi sundaram lyrics, பராசக்தி, பராசக்தி படம், பராசக்தி வசனம், பராசக்தி பூசாரி

நாடகத்தில் நடித்து வந்த அந்த 18 வயது ஹீரோ வேறு யாருமில்லை, கே.பி.காமாட்சிதான். வந்த இரண்டு பேர்களில் இளைஞனாக இருந்தவர் எம்.ஜி.சக்கரபாணி, அவருடன் வந்த ஒல்லி சிறுவன் அவரது தம்பி எம்.ஜி.ராமச்சந்திரன்.

parasakthi dialogue in tamil pdf, parasakthi songs, parasakthi video songs download masstamilan, kalaignar parasakthi vasanam in tamil, parasakthi tamilyogi, parasakthi dialogue in english, parasakthi tamil movie download tamilrockers, parasakthi movie dialogue download, kp kamatchi sundaram, kp kamatchi sundaram movies, kp kamatchi sundaram lyrics, பராசக்தி, பராசக்தி படம், பராசக்தி வசனம், பராசக்தி பூசாரி

விஜய் டிவி மாகாபா ஆனந்துக்கு இவ்வளவு சம்பளமா?

கே.பி.காமாட்சி எம்ஜிஆர், சிவாஜிக்கெல்லாம் சீனியர். அதனால் சிவாஜியை டா போட்டு தான் அழைப்பார். பதிலுக்கு சிவாஜி காமாட்சியை அண்ணே என்று மரியாதையாகத்தான் அழைப்பார். அப்படியொரு அந்தஸ்தில் இருந்தவர் காமாட்சி. 1936-ல் வெளிவந்த பதிபக்தி காமாட்சி நடித்த முதல் படம். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் காமாட்சி கொள்ளைக்கூட்டத் தலைவனாக நடித்தார். கலைவாணரின் நல்லதம்பியில் இந்திரனாக நடித்ததுடன், குடிச்சுப் பழகணும் பாலைக் குடிச்சுப் பழகணும்... என்ற பாடலையும் எழுதினார். ஏவி மெய்யப்ப செட்டியார் இயக்கி தயாரித்த, நாம் இருவர் படத்தில் இடம்பெற்ற, மகான் காந்தி மகான் பாடலும் காமாட்சி எழுதியதே. அதன் பிறகு செட்டியாருக்கும் அவருக்கும் மனஸ்தாபமாகி, மற்றவர்களின் வற்புறுத்துதலால் தனது வாழக்கை படத்தில் மறுபடியும் பாடல் எழுத வாய்ப்பு அளித்தார். சிச்சுவேஷன் சொல்லி, டியூன் கொடுத்ததும், உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்... என்று காமாட்சி முதல்வரியைச் சொல்ல, மற்றவர்களின் பேச்சைக் கேட்டு காமாட்சியை தவறாக புரிந்து கொண்டதை செட்டியார் உணர்ந்து மீண்டும் அவருக்கு வாய்ப்புகள் அளித்தார்.

parasakthi dialogue in tamil pdf, parasakthi songs, parasakthi video songs download masstamilan, kalaignar parasakthi vasanam in tamil, parasakthi tamilyogi, parasakthi dialogue in english, parasakthi tamil movie download tamilrockers, parasakthi movie dialogue download, kp kamatchi sundaram, kp kamatchi sundaram movies, kp kamatchi sundaram lyrics, பராசக்தி, பராசக்தி படம், பராசக்தி வசனம், பராசக்தி பூசாரி
பராசக்தி பூசாரி

நம்ம ராஜா ராணி சந்தியாவா இது? வீடியோவை பாத்தா அசந்துடுவீங்க!

ஓ ரசிக்கும் சீமானே..., சிற்பி செதுக்காத பொற்சிலையே... தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு... புதுப்பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே... போன்ற புகழ்பெற்ற பாடல்களை காமாட்சி எழுதினார். நடிகர், பாடலாசிரியர் என புகழுடன் இருந்த காமாட்சியை வீழ்த்தியது அவரது குடிப்பழக்கம். எம்ஜிஆரின் நாடோடி மன்னனுக்கு பாடல் எழுத வேண்டியவர், தனது குடிப்பழக்கத்தால் அந்த வாய்ப்பை இழந்தார். அவர் இறந்த போது கலைவாணர், எம்ஜிஆர், வி.கே.ராமசாமி உள்பட ஏராளமான திரையுலகினர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் கலைவாணர், எம்ஜிஆர், கே.ஆர்.ராமசாமி, வி.கே.ராமசாமி உள்ளிட்டவர்கள்தான் காமாட்சியின் உடலை சுமந்து சென்றனர்.

parasakthi dialogue in tamil pdf, parasakthi songs, parasakthi video songs download masstamilan, kalaignar parasakthi vasanam in tamil, parasakthi tamilyogi, parasakthi dialogue in english, parasakthi tamil movie download tamilrockers, parasakthi movie dialogue download, kp kamatchi sundaram, kp kamatchi sundaram movies, kp kamatchi sundaram lyrics, பராசக்தி, பராசக்தி படம், பராசக்தி வசனம், பராசக்தி பூசாரி

காலம் மறக்கடித்த கலை ஆளுமைகளில் கே.பி.காமாட்சி சுந்தரமும் ஒருவர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி