ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன காக்கா முட்டை பாய்ஸ்

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன காக்கா முட்டை பாய்ஸ்
சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை
  • Share this:
காக்கா முட்டை படத்தில் நடித்திருந்த சிறுவர்களின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மணிகண்டன் இயக்கத்தில் வெற்றிமாறன், தனுஷ் தயாரிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் காக்கா முட்டை. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ரமேஷ் திலக், யோகி பாபு ஆகியோரும் நடித்திருந்தனர்.

தொழில்முறை நடிகர்களான இவர்களின் நடிப்பை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இருந்தது சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த விக்னேஷ் - ரமேஷ் ஆகிய இரு சிறுவர்களின் நடிப்பு.


அதனால் முதல் படத்திலேயே இந்த இரண்டு சிறுவர்களும் மக்கள் மனதில் ஆழமாய் இடம்பிடித்தனர். இந்திய அளவில் இரண்டு சிறுவர்களும் பிரபலமாக, படமும் 2 தேசிய விருதுகளைப் பெற்றது.

இந்தப் படத்துக்குப் பின்னர் விக்னேஷ் சமுத்திரக்கனியின்‘அப்பா’ படத்திலும் நயன்தாராவின் அறம் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த இரண்டு சிறுவர்களின் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.

அந்தப் புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் இருவரும் மாறிப் போயிருப்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: உலகத் தமிழர்கள் வாழ்த்துச் சொல்ல வேண்டும் - மணிரத்னம் பிறந்தநாளுக்காக பாரதிராஜா வெளியிட்ட வீடியோ
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading