முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: வெளியானது 'பருந்தாகுது ஊர்க்குருவி' படத்தின் ட்ரைலர்!

WATCH: வெளியானது 'பருந்தாகுது ஊர்க்குருவி' படத்தின் ட்ரைலர்!

பருந்தாகுது ஊர்க்குருவி

பருந்தாகுது ஊர்க்குருவி

Parundhaaguthu Oor Kuruvi - Trailer | இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் 'பருந்தாகுது ஊர்க்குருவி' திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் 'பருந்தாகுது ஊர்க்குருவி'. 'வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது' எனும் கருத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகிறது.

மும்பையைச் சேர்ந்த மாடல் காயத்ரி ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். ராட்சசன் புகழ் வினோத் சாகர், அருள் டி சங்கர், கோடாங்கி வடிவேல், இ.ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிமிக்கி கம்மல் புகழ் ரஞ்சித் உன்னி இசையமைத்துள்ளார்.

நிறைய மர்மங்கள் நிறைந்த காட்டுக்குள் சிக்கிக்கொண்ட இரண்டு நபர்கள், ஒருவரையொருவர் எப்படிக் காப்பாற்றுகிறார்கள். அபாயகரமான சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் என்ன என்ற சர்வைவல் திரில்லர் கதையாக 'பருந்தாகுது ஊர்க்குருவி' படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

' isDesktop="true" id="903599" youtubeid="LIkVSPSxOT0" category="cinema">

நன்றி: Tips Tamil

First published:

Tags: Movie Trailers