Home /News /entertainment /

இன்று மாலை வெளியாகிறது அருள்நிதி நடிக்கும் டைரி படத்தின் ட்ரெய்லர்

இன்று மாலை வெளியாகிறது அருள்நிதி நடிக்கும் டைரி படத்தின் ட்ரெய்லர்

நடிகர் அருள்நிதி

நடிகர் அருள்நிதி

ரோன் யோகன் இசையமைத்துள்ள இந்த படத்தை, கதிரேசன் தனது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    நடிகர் அருள்நிதியின் நடிப்பில் உருவாகியுள்ள டைரி படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது என்று படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

    இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் டைரி. கிரைம் திரில்லர் ஜோனரில், டைரி படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருள்நிதிக்கு ஜோடியாக பவித்ரா நடித்திருக்கிறார்.

    கிஷோர், ஜெயப்பிரகாஷ், தணிகை உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ரோன் யோகன் இசையமைத்துள்ள இந்த படத்தை, கதிரேசன் தனது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார்.

    Also read... கருப்பு நிற லெஹங்காவில் புகைப்படங்களை வெளியிட்ட வாணி கபூர்

    கடந்த 15ஆம் தேதி வெளியான டைரி படத்தின் டீசர் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் டைரி அடுத்த மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படத்தை உதயநிதியின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும் என்றும் படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment

    அடுத்த செய்தி