ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வருகிறது சர்தார் பட ட்ரெய்லர்... கார்த்தி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

வருகிறது சர்தார் பட ட்ரெய்லர்... கார்த்தி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

சர்தார் படத்தில் கார்த்தி

சர்தார் படத்தில் கார்த்தி

சர்தார் திரைப்படத்தில் கார்த்தி உடன் ராஷி கண்ணா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது. 

இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் தற்போது சர்தார் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  இந்த திரைப்படத்தில் கார்த்தி நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஸ்பை திரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

சர்தார் திரைப்படத்தில் கார்த்தி உடன் ராஷி கண்ணா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இந்த நிலையில் பட குழுவினர் படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரை நாளை பட குழுவினர் வெளியிடுகின்றனர்.  சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.  அந்த வகையில் நாளை வெளியாகும் ட்ரெய்லரும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... வாரிசு லேட்டஸ்ட் அப்டேட்... விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

சர்தார் திரைப்படத்தில் நடிகர் கார்த்தி உளவாளியாக நடிக்கிறார். அத்துடன் அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.  அந்த கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என பட குழுவினர் நம்புகின்றனர்.

கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளியான விருமன்,  பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெரும் வெற்றியை பதிவு செய்தன. அந்த வரிசையில் இந்த சர்தார் திரைப்படமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi