முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆர்யாவின் கேப்டன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆர்யாவின் கேப்டன் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆர்யா

ஆர்யா

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் டேடி ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் தற்போது ஆர்யா நடிப்பில் கேப்டன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான கேப்டன் திரைப்படத்தின் டிரைலர் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது.

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் டேடி ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் தற்போது ஆர்யா நடிப்பில் கேப்டன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்துவிட்டன. மேலும் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டிரைலரை வரும் 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.

அதற்கான அறிவிப்பை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ளார். சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் ஹாலிவுட் படங்களின் கதை சாயலில் வித்தியாசமான கதை களத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது.

Also read... வெளியானது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரெய்லர்!

அதுபோல் இந்த கேப்டன் திரைப்படமும் புதுமையாக இருக்கும் என படக் குழுவினர் கூறுகின்றனர். இதில் ஆர்யா ராணுவ வீரராக நடிக்கிறார், டி இமான் இசையமைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Arya